Published:Updated:

கிட்னி செயலிழப்பு; அதிகரித்த ரத்த அழுத்தம் - தீவிர சிகிச்சையில் லாலு பிரசாத் யாதவ்

சத்யா கோபாலன்

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக அவரை கண்காணிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Lalu Prasad Yadav
Lalu Prasad Yadav ( Twitter/@laluprasadrjd )

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமாக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். பீகார் அரசியலில் முக்கிய இடம் பிடித்த இவரை, அரசியல் கட்சிகள் எதிரியாகப் பார்த்தாலும் தன் மாநில மக்களுக்கு லாலு எப்போதும் ஹீரோதான்.

Lalu Prasad Yadav
Lalu Prasad Yadav
Twitter/@laluprasadrjd

மத்திய ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் போது ரயில்வே துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற லாலு, அதை லாபத்தில் இயங்கச் செய்தார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கிய லாலு சமீபகாலமாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் மீது 4 மாட்டுத் தீவன ஊழல் வழக்குகள் உள்ளன. அதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிட்னி பாதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 71 வயதான லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக 50 சதவிகிதம் இயங்கிவந்த அவரது கிட்னி தற்போது 37 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Lalu Prasad Yadav
Lalu Prasad Yadav
Twitter/@laluprasadrjd

மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் தீவிர கண்காணிப்பில் லாலு வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று ஜார்கண்ட் வந்த லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தந்தையை நேரில் சந்தித்துள்ளார்.

Vikatan

லாலுவின் உடல்நிலை பற்றிப் பேசியுள்ள மருத்துவர் உமேஷ் பிரசாத், ``லாலுவின் கிட்னி சரிவர இயங்கவில்லை. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் தொடர்ந்து மாறிக்கொண்டே உள்ளது. அவரின் உடல் நிலை சீராக இல்லை. முந்தைய வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரம் அவரால் போதுமான உணவும் உட்கொள்ள முடியவில்லை. எனவே, அவருக்கு மருந்துகள் வழங்கி வருகிறோம்” எனக் கூறியுள்ளார். இவர்தான் லாலுவின் உடல்நிலையைக் கண்காணித்துக்கொள்கிறார்.

Lalu Prasad Yadav’
Lalu Prasad Yadav’
Twitter/@laluprasadrjd

லாலு பிரசாத்தின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்ற செய்தி அவரது கட்சியினரிடையே பரவ, நிர்வாகிகளும் தொண்டர்களும் கலக்கத்தில் உள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.