Published:Updated:

"அலுவலகத்தில் என்னை `சார்' என்று அழைத்தால் அபராதம்! ஏனென்றால்..." - ஹர்ஷ் கோயங்கா அதிரடி

ஹர்ஷ் கோயங்கா

பிரபல தனியார் நிறுவனத்தின் தலைவரான ஹர்ஷ் கோயங்கா என்பவர் தன்னைப் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும், இல்லையென்றால் ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

"அலுவலகத்தில் என்னை `சார்' என்று அழைத்தால் அபராதம்! ஏனென்றால்..." - ஹர்ஷ் கோயங்கா அதிரடி

பிரபல தனியார் நிறுவனத்தின் தலைவரான ஹர்ஷ் கோயங்கா என்பவர் தன்னைப் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும், இல்லையென்றால் ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

Published:Updated:
ஹர்ஷ் கோயங்கா
ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்ய ஆரம்பித்தது முதல் இன்றுவரை இந்த `சார்... சார்... சார்' என்ற வார்த்தை படிக்காதவர்கள் தொடங்கி மெத்தப் படித்தவர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த `சார்' என்ற வார்த்தை மரியாதையாகவும் நவீனமாகவும் தெரிந்தாலும்கூட இது ஒரு நவீனமான அடிமைத்தன வார்த்தை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சமத்துவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில் இது போன்ற அடிமைத்தனமான வார்த்தைகளைக் களைய வேண்டியது அவசியம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட தற்போது இந்த 'சார்' என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம், யாராக இருந்தாலும் பெயர் சொல்லி அழைத்தால் போதுமானது என்று தங்களின் ஊழியர்களிடம் அறிவுறுத்தி வருகின்றன. அந்த வகையில் இன்று பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களில் உரிமையாளர், உயர் அதிகாரி உள்ளிட்ட அனைவரையும், அங்கு பணிபுரிபவர்கள் பெயர் சொல்லி அழைப்பது என்பது இயல்பாகி வருகிறது. இது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடையே நல்ல இணக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கார்ப்பரேட் நிறுவனம்
கார்ப்பரேட் நிறுவனம்
Representational Image

இந்நிலையில் மும்பையில் கோடிகளில் சந்தை மதிப்பு வைத்திருக்கும் 'ஆர்.பி.ஜி., என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் தலைவரான ஹர்ஷ் கோயங்கா, "என்னை அலுவலகத்தில் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும், இல்லையென்றால் ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படும்" என்று கூறியுள்ளார். இதற்காக அவர் தனது மேசையில் உண்டியல் ஒன்றை வைத்துள்ளார். யாரேனும் தவறுதலாக அவரை 'சார்' என்று குறிப்பிட்டால் அதில் அவர்கள் ரூ.50 போடவேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹர்ஷ் கோயங்கா ஒரு முறை மும்பையைத் தவறுதலாக 'பம்பாய்' எனக் குறிப்பிட்டதாகவும் அதற்காக மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி தன்னிடம் 50 ரூபாய் நிதியாக வசூலித்ததாகவும் கூறினார். அதனால் தானும் இந்த நல்ல யோசனையைப் பின்பற்றி தற்போது, தன்னை சார் என்று அழைப்பவர்களிடம் ரூ. 50 வசூலித்து வருவதாகக் கூறுகிறார்.

மேலும் இது பற்றிக் கூறும் அவர், "என்னிடம் பணிபுரியும் ஊழியர் ஒருவர் என்னைப் பெயர் சொல்லி அழைக்க முடியாமல் தினமும் 50 ரூபாயைப் பெட்டியில் போட்டுவிடுவார். இது மிகவும் நகைச்சுவையாக இருக்கும். பலர் பழக்கத் தோஷத்தில் என்னை 'சார்' என்று அழைத்து மாட்டிக்கொள்வார்கள். பின்னர் 50 ரூபாய் கொடுத்துவிட்டுப் போவார்கள். இப்படி நான் சில நூறு ரூபாய்களைச் சேகரித்து, அவற்றைத் தொண்டு காரியங்களுக்குக் கொடுத்து வருகிறேன். இன்னும் சிலர் என்னை 'மிஸ்டர் கோயங்கா' என்று அழைக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் 'என்னைப் பெயர் சொல்லி 'ஹர்ஷ்' என்று கூப்பிடுங்கள்’ என்று சொல்வேன். இது ஒன்றும் புதிய கலாச்சாரம் அல்ல, ஏற்கெனவே இங்கு இருப்பதுதான்" என்று சிரித்தபடி கூறினார்.