Published:Updated:

`15 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி’ - கேரளா வழியில் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் உ.பி

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத் ( ANI )

உத்தரப்பிரதேசத்தில் பணிபுரியும் கூலி மற்றும் கட்டடத் தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆகவும் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. இந்நிலையில் இன்று காலை லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் அங்கு நிலவும் கொரோனாவின் நிலை பற்றிப் பேசினார், ``உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா அவஸ்தை... வீட்டுக்குள் முடங்கலாம்... ஆனால், பிழைப்புக்கு வழி?!

மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கன்காணிப்புக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸால் பல லட்சம் கூலித்தொழிலாளர்கள் மற்றும் கட்டடத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்காக தலா ரூ.1,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 15 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் என 20.37 லட்சம் ரூபாய் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் தொழிலாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படவுள்ளது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
ANI

அதேபோல் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்களுக்கு நிதியுதவி, வயதானவர்களுக்கு இரண்டு மாத ஓய்வூதியம், ரேஷன் கார்டு இல்லாத குடும்பத்தினருக்கு இலவச கோதுமை, அரிசி ஆகியவை வழங்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் கொரோனா வைரஸால் அச்சம்கொள்ளத் தேவையில்லை, மாநிலத்துக்குத் தேவையான அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை தேவையான அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே மக்கள் மருந்துக்கடைகளைத் தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை.

பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி நாம் அனைவரும் ஜனதா ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். நாளை உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகள் போன்றவை இயங்காது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ள மாநிலங்களில் கேரளாவுக்கு அடுத்தப்படியக உத்தரப்பிரதேசமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு