Published:Updated:

``தொழிலில் போட்டியிட முடியாததால் சதி" - ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு

ஜாக்குலின், நோரா
News
ஜாக்குலின், நோரா

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

``தொழிலில் போட்டியிட முடியாததால் சதி" - ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

Published:Updated:
ஜாக்குலின், நோரா
News
ஜாக்குலின், நோரா

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டிப் பறித்ததாக சுகேஷ் சந்திரசேகர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மிரட்டிப் பறித்த பணத்தில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி மற்றும் மாடல் அழகிகளுக்கு சுகேஷ் சந்திரசேகர் பணத்தைக் கோடிக்கணக்கில் செலவுசெய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோராவிடம் அமலாக்கப் பிரிவு மற்றும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

நோரா
நோரா

அமலாக்க பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால் நோரா ஃபதேஹி இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் ஜாமீன் கொடுத்திருக்கிறது. ஜாக்குலின் தனது ஜாமீன் மனுவில், `தன்னைப் போன்று நடிகை நோரா ஃபதேஹியும் பரிசுப்பொருள்களை சுகேஷிடம் வாங்கியிருக்கிறார். ஆனால், அவர் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் 15 மீடியா ஹவுஸ் ஆகியவற்றின் மீது நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது தொடர்பாக நோரா ஃபதேஹி தனது வழக்கறிஞர் மூலம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதில், `ஜாக்குலின் தெரிவித்த கருத்துகளை 15 மீடியா ஹவுஸ் வெளியிட்டிருக்கிறது. 15 மீடியா ஹவுஸும், ஜாக்குலின் பெர்னாண்டஸும் இணைந்து சதிசெய்துள்ளனர். மனுதாரரின் (நோரா) நிதி, சமூக அந்தஸ்தை வீழ்த்த, குற்றம்சாட்டப்படும் நபர் சதி செய்திருக்கிறார். நியாயமான முறையில் வேகமாக முன்னேறிவரும் மனுதாரருடன் போட்டியிட முடியாதவர்களை அச்சமடையச்செய்திருக்கிறது. புகார்தாரருடன் நியாயமான முறையில் போட்டியிட முடியாத போட்டியாளர்கள், மனுதாரரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இது மனுதாரரின் வேலையிலும் இழப்பை ஏற்படுத்துகிறது.

ஜாக்குலினுடன் சுகேஷ்
ஜாக்குலினுடன் சுகேஷ்

சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருள்களைப் பெற்றதாக அமலாக்கப் பிரிவு மனுதாரர் மீது தவறாகக் குற்றம்சாட்டியிருக்கிறது. மனுதாரர் எந்தவிதத் தவறும் செய்யவில்லை. சுகேஷ் சந்திரசேகருடன் நேரடியாக மனுதாரருக்குத் தொடர்பு கிடையாது. சுகேஷ் சந்திரசேகரின் மனைவி ரீனாவுடன் மட்டுமே தொடர்புவைத்திருந்தார். அதோடு மனுதாரர் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து எந்தவித பரிசுப்பொருள்களையும் பெறவில்லை” என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.