Published:Updated:

புதுச்சேரி தேர்தல்துறையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மாயம்! - அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ

ஆர்.டி.ஐ

புதுச்சேரி தேர்தல்துறையில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் காணாமல்போனதற்குக் காரணமான அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.டி.ஐ தகவல் அடிப்படையில் ஆளுநர் தமிழிசையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி தேர்தல்துறையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மாயம்! - அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ

புதுச்சேரி தேர்தல்துறையில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் காணாமல்போனதற்குக் காரணமான அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.டி.ஐ தகவல் அடிப்படையில் ஆளுநர் தமிழிசையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஆர்.டி.ஐ

ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அளித்திருக்கும் மனுவில், ``புதுச்சேரியில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக டிஜிட்டல் தெர்மோ மீட்டர், PPE கிட், குப்பைத்தொட்டி, நான்கு சக்கர நாற்காலிகள் போன்றவை நலவழித்துறை மூலம் வாங்கப்பட்டு தேர்தல்துறைக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பொருள்கள் புதுச்சேரியில் இருந்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்பட்டன.

தேர்தல் துறை
தேர்தல் துறை

தேர்தலுக்காக வாங்கித் தந்த பொருள்களின் தற்போதைய நிலை பற்றி நலவழித்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு அவர்கள் தகவல் தரவில்லை. பின்பு மேல்முறையீடு செய்ததின் பேரில் ``மேற்கூறிய கொரோனா பரிசோதனை உபகரணங்கள் அனைத்தும் ரூ.1.07 கோடிக்கு டிஜிட்டல் தெர்மாமீட்டர், பி.பி.இ கிட், நான்கு சக்கர நாற்காலிகள், குப்பைத்தொட்டிகள் வாங்கி தேர்தல்துறையினரிடம் வழங்கிவிட்டோம். தேர்தலுக்குப் பிறகு இந்தச் சாதனங்களைத் திரும்பப் பெற்றதற்காக, பதிவேட்டில் பதிவு செய்ததற்கான தகவல் இல்லை" என்று தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பொருள்களுக்கான பதிவேட்டில் உள்ள திரும்பப் பெற்ற சாதனங்களின் அடிப்படையில் பார்க்கும்போது ரூ.29.53 லட்சம் மதிப்பிலான 300 நான்கு சக்கர நாற்காலிகள், 858 டிஜிட்டல் தெர்மோ மீட்டர்கள், 2,670 பி.பி.இ கிட்கள், 445 குப்பைத்தொட்டிகள் ஆகிய சாதனங்கள் மாயமாகிப்போனது தெரியவந்தது. இந்த உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு அளிக்கும்போது அந்தந்தத் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு அளித்த தேர்தல்துறையினர், அந்தப் பொருள்களைத் திரும்ப பெறும்போது அளித்த எண்ணிக்கையின்படி உபகரணங்களைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும்.

வாங்கிய பொருள்களை திருப்பி அளிக்காத தேர்தல் நடத்தும் அதிகாரிகள்மீது அப்போதே உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால், ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தற்போது காணாமல் போயுள்ளன. இதற்குத் தேர்தல்துறையினரே பொறுப்பேற்க வேண்டும். எனவே, இது குறித்து அலட்சியமாகப் பணியாற்றியுள்ள தேர்தல்துறை மீதும், பொருள்களை ஒப்படைக்காத தேர்தல் நடத்திய அதிகாரிகள்மீதும், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அவர்களிடம் காணாமல்போன பொருள்களுக்கான தொகையை வசூலித்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism