Published:Updated:

டெல்லி: பிரசவத்துக்கு அனுமதி மறுப்பு? - மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி!

குழந்தை ( Photo by Omar Lopez on Unsplash )

மருத்துவர்கள் அந்தக் கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லி: பிரசவத்துக்கு அனுமதி மறுப்பு? - மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி!

மருத்துவர்கள் அந்தக் கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
குழந்தை ( Photo by Omar Lopez on Unsplash )

டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில், கர்ப்பிணி ஒருவரை மருத்துவர்கள் பிரசவத்துக்கு அனுமதிக்காததையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியிலேயே அவர் உறவினர்கள் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லி, காஸியாபாத்தை அடுத்த கேராவில் வசிக்கும் 30 வயதான பெண் ஒருவர், பிரசவத்துக்காக டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு உறவினர்களுடன் நேற்று முன்தினம் சென்றிருக்கிறார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் அந்தக் கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவர்களிடம் அந்தப் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதம் செய்தும், அவர்கள் அனுமதிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

கர்ப்பிணி
கர்ப்பிணி

அதையடுத்து, நேற்று முன்தினம் இரவு முழுவதும் கர்ப்பிணி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை அந்தப் பெண்ணுக்கு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியில்வைத்தே அவர் உறவினர்கள் பிரசவம் பார்த்திருக்கின்றனர். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகே மருத்துவர்கள் மருத்துவமனையில் தாய்-சேய் இருவரையும் அனுமதித்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பாக சப்தர்ஜங் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தை
குழந்தை

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு மூத்த மருத்துவர் ஒருவர், ``குற்றச்சாட்டுகளின்படி, அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அந்த கர்ப்பிணி மருத்துவமனை வளாகத்திலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். ​​​​அந்தப் பெண்ணும், குழந்தையும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், அவர்கள் மகளிர் மருத்துவப் பிரிவில் உள்ள மூத்த மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தாய், சேய் இருவருமே நலமாக இருக்கின்றனர். இதுவரை மருத்துவமனைக்கு எதிராக எந்தப் புகாரும் வரவில்லை" என்றார்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையமும், சப்தர்ஜங் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.