Published:Updated:

போதைப்பொருள் விவகாரம்: `சாட்டையைச் சுழற்றும் சஞ்சய் சிங்; சிக்கலில் சமீர்?!' - என்ன நடக்கிறது?

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை கைது செய்யப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே அதிக ஆர்வம் காட்டியதாகத் தெரிய வந்துள்ளது.

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கடந்த மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்ட வழக்கில் தினம் தினம் புதிய தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஆர்யன் கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே, ஆர்யனை விடுவிக்கப் பண பேரத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து ஆர்யன் கான் வழக்கு விசாரணையிலிருந்து சமீர் வான்கடே விடுவிக்கப்பட்டார். அதேபோல, இந்த வழக்கு உட்பட மொத்தம் 6 வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, அதற்கு டெல்லியிலிருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

சமீர் வான்கடே
சமீர் வான்கடே

அவர்கள் தங்கள் விசாரணையைத் துரிதப்படுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில், புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. முன்னதாக போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானை கைது செய்த, அதிகாரி சமீர் வான்கடேவே ஆர்யனை விடுவிக்க அதிக ஆர்வம் காட்டி இருப்பது தெரியவந்திருக்கிறது. சமீர் வான்கடே தன் வழக்கமான ரெய்டு நடைமுறையிலிருந்து மாறுபட்டு, ஆர்யனை விடுவிக்க அதிக ஆர்வம் காட்டியதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதேபோல, பிற போதைப்பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் ரெய்டின் போது ஆர்யன் கானை கைது செய்வதில் அதிக ஆர்வம் காட்டியதாகவும், மற்றவர்கள் செல்ல அனுமதித்துவிட்டதாகவும் டெல்லி அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சஞ்சய் சிங்
சஞ்சய் சிங்

இந்த நிலையில், விசாரணைக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரி சஞ்சய் சிங், கடந்த சில தினங்களுக்கு முன்பு சமீர் வான்கடேவுடன் பார்ட்டி நடந்த கப்பலுக்கு சென்று ஆய்வுசெய்தார். அதைத் தொடர்ந்து, சாட்சியாக சேர்க்கப்பட்டிருக்கும் சிலரை மீண்டும் அழைத்து மறு விசாரணை நடத்தவும் சஞ்சய் சிங் தலைமையிலான அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக, சமீர் வான்கடேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

ஆர்யன் கான் வழக்கு விசாரணையிலிருந்து அதிகாரி சமீர் வான்கடே நீக்கம்?! - அடுத்து என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு