Published:Updated:

`நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள்!'- கங்குலி மகளின் `வைரல்' எதிர்ப்பு பதிவு!

கங்குலியின் மகள் சனா இந்திய குடியுரிமைச் சட்ட மசோதாவை எதிர்க்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சனா கங்குலி
சனா கங்குலி

இந்திய குடியுரிமைச் சட்ட மசோதா மக்களவையிலும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பா.ஜ.க அரசு இதை மும்முரமாக செயல்படுத்தியது. இந்த சட்ட மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களும் குரல் எழுப்பினர். மேலும், மாணவர்கள் போராடத் தொடங்கினர். ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட ஆரம்பித்தனர். இதையடுத்து, இந்தப் போராட்டம் மிகத் தீவிரமாக உருவெடுத்தது. இளைஞர்களிடையே கடும் எதிர்ப்பு வந்துகொண்டே இருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். இது ஒரு மாணவர்களின் போராட்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளனர்.

ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள்
ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள்

இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மகள் சனா இந்திய குடியுரிமைச் சட்ட மசோதாவை எதிர்க்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பல்வேறு பிரபலங்கள் மௌனமாக இருக்கும் இந்த நிலையில், இவரது பதிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் வீரேந்திர சேவாக் கூட இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

2003-ம் ஆண்டு வெளியான 'தி எண்ட் ஆஃப் இந்தியா' (The end of India) குஷ்வந்த் சிங் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம். இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில வரிகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். "இன்று, நான் முஸ்லிம் அல்ல கிறிஸ்தவன் அல்ல என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளும் நபர்களே நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். இவர்கள் ஏற்கனவே இடதுசாரி வரலாற்றாசிரியர்களையும் மேற்கத்தியமயமாக்கப்பட்ட இளைஞர்களையும் குறிவைத்து வருகிறார்கள். நாளை இது உங்களின் மீதும் பாயும்.

`இப்படித்தான் இருக்கும் இவர்களின் போராட்டம்!’ - கவனம் ஈர்த்த ஜேஎம்இ மாணவர்கள் #Viral
சனா கங்குலி பதிவு
சனா கங்குலி பதிவு

உங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வருவார்கள். பெண்கள் அணியும் பாவாடை இப்படித்தான் இருக்க வேண்டும். இறைச்சி சாப்பிடக்கூடாது, மது அருந்துவது கூடாது, வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கக் கூடாது, வருடாந்திர யாத்திரையாக கோயிலுக்குச் செல்லக் கூடாது, அவர்கள் கூறும் பற்பசையை தான் பயன்படுத்த வேண்டும், பொது இடங்களில் கை குலுக்குதல் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள முத்தம் கொடுப்பது இதற்கு பதிலாக நீங்கள் `ஜெய் ஸ்ரீராம்' என்று தான் முழங்க நேரிடும். ஒருவரும் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள நீங்கள் இதை உணர வேண்டும்" இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.