Published:Updated:

`அப்பாவின் பணத்தை வீணாக்குகிறார்!' - இன்ஸ்டாவில் விமர்சித்தவருக்கு சச்சின் மகள் சாராவின் பதில்

சாரா டெண்டுல்கர்
சாரா டெண்டுல்கர் ( Instagram Image )

கிரிக்கெட் வீரர் சச்சினின் மகள் காபி ஷாப்பில் அமர்ந்து காபி குடித்ததை போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் சாராவை 12 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். சாரா எந்தக் காரியம் செய்தாலும் உடனே அதனை போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். 23 வயதாகும் சாரா லண்டனில் மருத்துவம் படித்துள்ளார்.

சாரா டெண்டுல்கர்
சாரா டெண்டுல்கர்
Instagram Image

சமீபத்தில் மும்பை பரேல் பகுதியில் உள்ள 'புளு டோகாய் காபி ரோஸ்டர்' காபி ஷாப் சென்று காபி குடித்தார் சாரா. அதை போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார். இதற்காக அவரின் இன்ஸ்டா ஃபாலோயர் ஒருவர் சாராவை விமர்சித்துள்ளார்.

சாரா பகிர்ந்திருந்த காபி புகைப்படத்தைச் சுட்டிக்காடி, `சாரா அப்பாவின் பணத்தை வீணாக செலவு செய்கிறார்' என விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த சாரா, ``காபிக்காக செலவிடப்பட்ட பணம் சரியாகத்தான் செலவிடப்பட்டிருக்கிறது" எனப் பதிலளித்துள்ளார். மேலும் அந்தப் பதிலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாவிலும் ஷேர் செய்திருக்கிறார் சாரா.

சாரா இன்ஸ்டா ஸ்டோரி
சாரா இன்ஸ்டா ஸ்டோரி

முன்னதாக சாரா, தன் சகோதரர் மும்பை இந்தியன் அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டு இருப்பதைப் பாராட்டி இன்ஸ்டாகிராமில் தகவல் வெளியிட்டு இருந்தார். சாராவை காபிக்காக விமர்சித்த பெண், அப்போதும் விமர்சித்திருந்தார். சச்சின் மகன் அர்ஜூன் டி20 கிரிக்கெட்டில் விளையாட மும்பை அணிக்கு வெறும் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டு இருந்ததை அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு