Published:Updated:

`தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் எண்ணிக்கை என்ன?' - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

சுப்ரீம் கோர்ட்

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மறுப்பது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

`தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் எண்ணிக்கை என்ன?' - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மறுப்பது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Published:Updated:
சுப்ரீம் கோர்ட்

தேசிய பாதுகாப்பு அகாடமியின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரி, ராஷ்ட்ரிய மிலிட்டரி பள்ளிகளில் 2021-ம் ஆண்டு வரை பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படாமல் இருந்தனர். கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் தலையிட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும், அதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்ட பிறகு அடுத்த ஆண்டிலிருந்து சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், அதை ஏற்கமறுத்த சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டே தேசிய பாதுகாப்பு அகாடமி கல்லூரி மற்றும் பள்ளியில் சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் பெண்கள் கலந்து கொள்ள அனுமதிவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து 19 பெண்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

கோப்புக்காட்சி
கோப்புக்காட்சி

ஆனால், நடப்பு ஆண்டும் 19 பெண்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று புதிய உத்தரவு ஒன்றை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. இதையடுத்து மூத்த வழக்கறிஞர்கள் பிரதிப் சர்மா, மொஹித் பால் ஆகியோர் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ``கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமி நடத்திய நுழைவுத்தேர்வின் அடிப்படையில் ராணுவத்திற்கு 10 பெண்களும், கடற்படைக்கு 3 பெண்களும், விமானப்படைக்கு 6 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். 2022-ம் ஆண்டுக்கு கூடுதலாக பெண்களை தேர்வு செய்ய தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், 2022-ம் ஆண்டு 19 பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது" என்று வாதிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன், சுந்தரேஷ் ஆகியோர், அரசு வழக்கறிஞரிடம் தேசிய பாதுகாப்பு அகாடமிக்கு இந்த ஆண்டும் 19 பெண்களை மட்டும் தேர்வு செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் பெண்கள் உட்பட எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்பது குறித்தும் மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு வழக்கறிஞரிடம் கேட்டுக்கொண்டனர்.

``கடந்த ஆண்டு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறி குறைவான எண்ணிக்கையில் பெண்களை சேர்ப்பதாக சொன்னீர்கள். ஆனால், இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போல 19 பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறீர்கள். இந்த எண்ணிக்கையை ஏன் முடிவு செய்தீர்கள். எந்நேரமும் 19 என்ற எண்ணிக்கை இருக்கக்கூடாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு தேர்வு செய்த 19 பேரே இந்த ஆண்டும் தேர்வு செய்வது என்று முடிவு செய்திருப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படியும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் ஐஸ்வர்யா பதி, ``கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது பிரச்னையில்லை. பாதுகாப்பு படைக்கும் பெண்களின் தேவை இருக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism