Published:Updated:

தந்தையின் உழைப்பை கவிதையாக்கிய மராட்டிய சிறுவன்.. சில மணிநேரங்களில் நடந்த துயரம்!

மகாராஷ்டிரா விவசாயிகளின் பிரச்னைகளை 8 வயதுச் சிறுவன் கவிதையாக எழுதியுள்ளான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மராத்தி மொழி தினமான பிப்ரவரி 27-ம் தேதி மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 3-வது படிக்கும் 8 வயதுச் சிறுவன் பிரசாந்த் எழுதிய கவிதைக்கு அங்கு பலத்த வரவேற்பு இருந்தது. மகாராஷ்டிரா விவசாயிகளின் பிரச்னைகளை அவன் தன் கவிதையில் வடித்திருந்தான்.

தந்தையின் உழைப்பை கவிதையாக்கிய மராட்டிய சிறுவன்.. சில மணிநேரங்களில் நடந்த துயரம்!

`மலையளவு பிரச்னைகள் உனக்கு இருந்தாலும் கடினமாக உழைக்கிறாய்; தற்கொலை செய்துகொள்ளாதே விவசாயி..’ எனத் தொடங்கும் அந்தக் கவிதை முழுவதும் விவசாயியின் தியாகத்தைக் குறிப்பதாக இருந்தது. பிரசாந்தின் தந்தை ஒரு விவசாயி. அவர் படும் துயரங்களை நேரில் பார்த்துதான் இந்தக் கவிதையை தானாகவே அந்தச் சிறுவன் எழுதியுள்ளான்.

பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சிறுவன் பள்ளியில் தன் கவிதைக்குக் கிடைத்த வரவேற்பை தந்தையிடம் கூற வேண்டும் என்ற ஆவலில் இருந்துள்ளான். தந்தை வீட்டில் இல்லாததால் சிறுவன் நண்பர்களுடன் விளையாடச் சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோது அவனது வீட்டின் முன்பு ஒரே கூட்டமாக இருந்துள்ளனர். சிறுவனின் தந்தை மல்ஹாரி பத்துலேவின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. கடன் பிரச்னை காரணமாக மல்ஹாரி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மரணம்
மரணம்
மாதிரி படம்

இதுகுறித்து பேசிய மல்ஹாரியின் தந்தை, ``மகளின் திருமணத்துக்காக உறவினர்களிடம் கடன் வாங்கியிருந்தான். கடனைச் செலுத்த முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தான். ஆனால், எங்களிடம் இதுகுறித்து எதுவும் பேசவில்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு