Published:Updated:

கடத்த முயன்ற இ-ரிக்‌ஷா ஓட்டுநர், நண்பர்கள்... போராடித் தப்பித்த 16 வயது சிறுமி! - நடந்தது என்ன?!

சிறுமி

அந்தச் சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த இ-ரிக்‌ஷா ஓட்டுநர், அவரின் நண்பர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துள்ளனர்.

கடத்த முயன்ற இ-ரிக்‌ஷா ஓட்டுநர், நண்பர்கள்... போராடித் தப்பித்த 16 வயது சிறுமி! - நடந்தது என்ன?!

அந்தச் சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த இ-ரிக்‌ஷா ஓட்டுநர், அவரின் நண்பர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துள்ளனர்.

Published:Updated:
சிறுமி

உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச் (Bahraich) பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தன்னைக் கடத்த முயன்ற இ-ரிக்‌ஷா ஓட்டுநர், அவரின் இரண்டு நண்பர்களிடமிருந்து தப்பி காவல் நிலையத்தில் புகார் செய்து, அவர்களின் கடத்தல் முயற்சியை முறியடித்திருக்கிறார்.

அந்தச் சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த இ-ரிக்‌ஷா ஓட்டுநர், அவரின் நண்பர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துள்ளனர். அதோடு அவர்களைக் கைது செய்யத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். 

க்ரைம் - கொலை
க்ரைம் - கொலை

இது குறித்து அந்தச் சிறுமி கூறுகையில், “பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்ல இ-ரிக்‌ஷாவில் ஏறியபோதுதான் இந்தச் சம்பவம் நடந்தது. வழக்கத்துக்கு மாறாக டிகோனிபாக்கிலிருந்து மாற்றுப் பாதையில் வண்டியைத் திருப்பினார். இதனால் சந்தேகமடைந்த நான் அவரிடம் கேள்வி எழுப்ப முயன்றேன்.  அப்போது அந்த இ-ரிக்‌ஷாவில் அந்த ஓட்டுநரின் நண்பர்கள் இருவரும் ஏறினர். பின்னர் என்னை மேரி மாதா கோயிலுக்கு அருகே உள்ள முட்புதர்களுக்குள் இழுத்துச் செல்ல முயன்றனர்.  நான் அவர்களுடன் போராடி என்னை விடுவித்துக்கொண்டேன். பிறகு, பிரதான சாலை வரை ஓடி வந்து ஒரு ஆட்டோவில் ஏறி டிகோரா காவல் நிலையத்தை அடைந்தேன்” என்றார்.