Published:Updated:

AirCrash: `பதறிய குழந்தைகள்; ரத்தம் படிந்த துணிகள்!’ - நேரில் பார்த்தவர்கள் விவரித்த துயரம்

கேரளா விபத்து
கேரளா விபத்து

கேரள விமான விபத்தில் உயிரிழந்த 2 விமானிகளில் ஒருவர் முன்னதாக இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் துபாயிலிருந்து 180 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் இரு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவின் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கி அந்தப் பாதிப்பு முடிவதற்குள் அதே நாளில் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது அம்மாநில மக்களை பெரும் சோகமடைய வைத்துள்ளது.

கேரளா விபத்து
கேரளா விபத்து

விமானம் விபத்துக்குள்ளானபோது மிகப் பெரும் சத்தம் கேட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ‘நாங்கள் வீட்டிலிருந்தபோது பெரும் சத்தம் கேட்டது ஓடி வந்து பார்த்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கிக் கிடந்தது. விபத்து நடந்த இடத்தில் பலர் சிக்கியிருந்தனர். 4 - 5 வயதுக் குழந்தைகளும் விமான இருக்கைக்கு உள்ளே சிக்கியிருந்தனர். இருட்டு, மழை, காயமடைந்தவர்களின் அலறல் சத்தம், ரத்தம் படிந்த முகங்கள், துணிகள், பயந்துபோன குழந்தைகள், ஆம்புலன்ஸ் சத்தம் என அந்த மொத்த இடமும் மிகவும் கொடுமையாகக் காட்சியளித்தது.

கேரளா: `பழுதான லேண்டிங் கியர்; இரண்டாகப் பிளந்த விமானம்!' - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

விபத்து பற்றி அறிந்ததும் பல உள்ளூர் வாசிகள் மீட்புப் பணிகளுக்காக வந்துவிட்டனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னரே, அவர்கள்தான் காயமடைந்தவர்களை மீட்டு தனியார் வாகனங்களில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். நாங்கள் விபத்து பகுதிக்குச் சென்றபோது காயமடைந்த சிலர் விமானத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தனர். அவர்களில் பலர் பலத்த காயமடைந்திருந்தனர். சிலருக்குக் கால்கள் உடைந்திருந்தன. அவர்களை மீட்கச் சென்ற என் கை முழுவதும் ரத்தத்தில் நனைந்தது. ஒரேநாளில் கேரளாவில் நடந்த அடுத்தடுத்த விபத்தினால் மொத்த மாநிலம் சோகத்தில் உறைந்துள்ளது” எனக் கூறியுள்ளனர்

கேரளா விபத்து
கேரளா விபத்து

``வானிலை ரேடார் படி, விபத்துக்குள்ளான விமானத்துக்குத் தரையிறங்க 28-வது ஓடுபாதை தரப்பட்டுள்ளது. ஆனால் விமானி, விமானத்தை தரையிறக்குவதற்குக் கடுமையான சிரமங்களைச் சந்தித்துள்ளார். இரண்டு முறை அதே இடத்தை சுற்றி வந்த விமானம் 10-வது ஓடுபாதையின் எதிர்த்திசையில் இருந்து வந்து விபத்துக்குள்ளாகியுள்ளது” என சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த 2 விமானிகளில் ஒருவர் முன்னதாக இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு