Published:Updated:

`தீவிரவாதிகள்' என நினைத்துப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு; சுரங்கத் தொழிலாளர்கள் 13 பேர் பலி!

துப்பாக்கி சூடு - வன்முறை

அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவு தரப்பில், 'தீவிரவாதிகள் என நினைத்துத் தவறுதலாகத் தாக்கி விட்டோம்' என வருத்தம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

`தீவிரவாதிகள்' என நினைத்துப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு; சுரங்கத் தொழிலாளர்கள் 13 பேர் பலி!

அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவு தரப்பில், 'தீவிரவாதிகள் என நினைத்துத் தவறுதலாகத் தாக்கி விட்டோம்' என வருத்தம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
துப்பாக்கி சூடு - வன்முறை

நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டம், ஓடிங் பகுதியில், செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.நேற்றிரவு வழக்கம்போல, சுரங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பணியை முடித்துக்கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அஸ்ஸாம் ரைபிள்ஸ் பாதுகாப்புப் படையினர், வேனில் வந்தவர்களை, என்.எஸ்.சி.என்(கப்லாங்) மற்றும் உல்பா இயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனச் சந்தேகித்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், வேனில் பயணித்த 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னரே, வேனில் வந்தவர்கள் சுரங்கத் தொழிலாளர்கள் என்பது பாதுகாப்புப் படையினருக்கு தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்புப் படையினர்
பாதுகாப்புப் படையினர்
சித்தரிப்புப் படம்

அதையடுத்து, சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைவதற்குள், கிராம மக்கள் அந்த பகுதியில் அதிக அளவில் திரண்டனர். தொழிலாளர்களை யார் என்று கூட விசாரிக்காமல் ஆயுத வன்முறையில் இறங்கிய பாதுகாப்புப் படையினர் மீது ஆத்திரத்தில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீக்கிரையான வாகனங்கள்
தீக்கிரையான வாகனங்கள்

அதில், பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் தீக்கிரையாகின. மேலும், அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவரும் மக்களின் தாக்குதலில் உயிரிழந்தார். அதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். அதில், கிராம மக்கள் சிலர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உறுதியான தரவுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவு தரப்பில், 'தீவிரவாதிகள் என நினைத்துத் தவறுதலாகத் தாக்கி விட்டோம்' என வருத்தம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு அந்த மாநில முதல்வர் நெய்பியு ரியோ கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாதுகாப்புப் படையினரின் மனிதாபிமானமற்ற, அதிகாரப்போக்கை கண்டித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

நாகாலாந்து மாநிலத்தின் மிகப்பெரிய பாரம்பர்ய இசை விழாவான ஹார்ன்பில் கொண்டாட்டம் களைக்கட்டத் தொடங்கியிருக்கும் நேரத்தில், இந்த சம்பவம் மக்கள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism