Published:Updated:

"வாழ்நாளில் முதல் முறையாக பேனாவைத் தொட்ட முதியவர்கள்"; குற்றங்களைத் தடுக்க கல்விதான் தீர்வு!

representational image

கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கிராமபுறப் பகுதியில் கல்வியில் பின்தங்கியுள்ள மக்களிடையே ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் எழுதுதல் போன்ற போட்டிகளை நடத்தி வருகின்றன கிராமப்புற இயக்கங்கள்.

"வாழ்நாளில் முதல் முறையாக பேனாவைத் தொட்ட முதியவர்கள்"; குற்றங்களைத் தடுக்க கல்விதான் தீர்வு!

கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கிராமபுறப் பகுதியில் கல்வியில் பின்தங்கியுள்ள மக்களிடையே ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் எழுதுதல் போன்ற போட்டிகளை நடத்தி வருகின்றன கிராமப்புற இயக்கங்கள்.

Published:Updated:
representational image

இந்தியாவில் இன்னமும் பல கிராமங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளன. இது போன்ற பகுதியில் கல்வியறிவை மேம்படுத்த அரசும் கிராமப்புற தன்னார்வல இயக்கங்களும் பல திடங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோயர் சுபன்சிரி மாவட்டத்தின் உள்ளூர் அதிகாரிகளும் கிராமப்புற என்.ஜி.ஓ-க்களும் சேர்ந்து கல்வி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

representational image
representational image

இந்நிலையில் அண்மையில் லோயர் சுபன்சிரி மாவட்டத்தின் ஜிரோ (Ziro) என்ற பகுதி உள்ளது. இங்கு வாழும் மக்கள் பலர் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் அவர்களில் பலர் தங்கள் வாழ்நாளில் இதுவரை பேனா, பென்சில் போன்றவற்றைத் தொடாதவர்கள். இதுபோன்று கல்வியில் பின்தங்கி இருக்கும் பகுதிகளில் நிறைய குற்றங்கள் நிகழ்வதாகவும் எழுதப் படிக்கத் தெரியாத காரணத்தால் அங்குள்ள மக்கள் நில மோசடிகளால் பாதிக்கப்படுகின்றனர்.எனவே இதனைத் தவிர்க்கும் விதமாகவும் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் கல்வி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 'GBs' என்ற கிராமப்புற தன்னார்வல இயக்கம் ஒன்று உள்ளூர் அதிகாரிகளுடன் சேர்ந்து எழுதப்படிக்கத் தெரியாத சுமார் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் எழுதுதல் போன்ற போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பற்றிக் கூறிய 'GBs' இயக்கத்தைச் சேர்த்தவர்கள், " முதியர்வர்களின் கைகளில் பேனா, பென்சில், ஸ்கெட்ச், கிரையான்ஸ்கள் போன்றவற்றைக் கொடுக்கிறோம். அதன் அனுபவங்களை உணர வைப்பதற்காகவும், கல்விக்கு வயது தடையில்லை என்பதை எடுத்துரைப்பதற்காகவும் இதைச் செய்கிறோம்" என்று கூறினர். மேலும், இது கல்வி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் என்றும் குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க உதவும் என்றும் கூறினர். இவர்களின் இந்தச் செயல் அப்பகுதியில் உள்ள மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism