Published:Updated:

`எல்லாம் தயார்.. சோதனை மட்டும் வெற்றிபெற்றால் ரூ.1,000-க்கு தடுப்பூசி’- இந்தியாவின் `சீரம்’ நிறுவனம்

கொரோனா தடுப்பூசி
News
கொரோனா தடுப்பூசி ( Representational image )

இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றிபெற்றால் அதை 1,000 ரூபாய்க்கு வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published:Updated:

`எல்லாம் தயார்.. சோதனை மட்டும் வெற்றிபெற்றால் ரூ.1,000-க்கு தடுப்பூசி’- இந்தியாவின் `சீரம்’ நிறுவனம்

இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றிபெற்றால் அதை 1,000 ரூபாய்க்கு வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
News
கொரோனா தடுப்பூசி ( Representational image )

மொத்த மனிதகுலத்தையும் வீட்டுச் சிறையில் அடைத்து, தினக்கூலிகளை அடுத்த வேளை உணவுக்காகத் திண்டாட வைத்து, நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தை நோக்கித் தள்ளி, கனவில்கூட நினைத்துப் பார்க்காத அளவு உயிரிழப்புகளை ஏற்படுத்தி, தன்னைத் தவிர வேறு எதைப் பற்றியுமே சிந்திக்க விடாமல் செய்து உலகத்தையே முடக்கிப்போட்டுள்ளது கொரோனா வைரஸ். டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உறுதி செய்யப்பட்ட இந்த வைரஸுக்கு இன்று சர்வதேச அளவில் 31,38,413 பேர் பாதிக்கப்பட்டு 2,17,985 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா
கொரோனா
Representational image

கொரோனாவைக் கட்டுப்படுத்த அல்லது முற்றிலும் அழிக்க இதுவரை மருந்து, தடுப்பூசி போன்ற எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. நோயின் அறிகுறிகளுக்கு ஏற்ப பழைய மருந்து மாத்திரைகளே வழங்கப்பட்டு நோயாளிகள் குணப்படுத்தப் படுகிறார்கள். பல நாடுகளில் பிளாஸ்மா தெரப்பி முறையும் செய்யப்படுகிறது. கொரோனாவை நிரந்தரமாக அழிக்க அதற்கான மருந்து கண்டுபிடிப்பது மட்டுமே ஒரே தீர்வு என ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் போட்டிபோட்டுக்கொண்டு தீவிரம் காட்டி வருகின்றன உலக நாடுகள்.

இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனமும் இணைந்துள்ளது. புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா 1966-ம் ஆண்டு சைரஸ் பூனாவாலா (Cyrus Poonawalla) என்பவரால் உருவாக்கப்பட்டது. உலகிலேயே அதிக அளவு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இது ஆண்டுக்கு 1.5 பில்லியனுக்கும் அதிகமான அளவு தடுப்பூசி மற்றும் உலகளவில் 65% குழந்தைகளுக்குத் தேவையான நோயெதிர்ப்பு மருந்துகளைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கான மூன்று தடுப்பு மருந்துகளைக் கண்டுப்பிடித்து வெளியிட்டதன் மூலம் உலகளவில் அனைத்து தலைப்பு செய்திகளிலும் இடம் பிடித்துள்ளது சீரம் நிறுவனம்.

தடுப்பூசி
தடுப்பூசி
Representational image

ஒன்று இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான கோடஜெனிக்ஸ் மற்றும் மூன்றாவது சீரமின் சொந்த மறு சீரமைப்பு நிறுவனமான பிசிஜியுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றால் வெறும் 1,000 ரூபாய்க்கு தடுப்பூசிகளைத் தயாரித்து வழங்க முடியும் என சைரஸ் பூனாவாலாவின் மகனும் சீரம் நிறுவனத்தின் சி.இ.ஓ-வுமான அடார் பூனாவாலா (Adar Poonawalla) பிஸினஸ் டுடே ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில் பேசியுள்ள அடார் பூனாவாலா, ``தற்போது எங்கள் தடுப்பூசிகள் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சோதனை செய்யப்பட்டுவருகிறது. அதே நேரத்தில் அந்த மருந்துகளின் உற்பத்தியையும் நாங்கள் தொடங்கிவிட்டோம். தடுப்பூசியின் சோதனை வெற்றிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உற்பத்தியைத் தொடங்கிவிட்டோம். சோதனை அங்கீகாரம் பெற்றால் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்துக்குள் மக்களுக்குத் தேவையான முதல் தொகுதி தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு தயாராக இருக்கும். தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்று அது செயல்திறன் மிக்கதாகவும் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானதாகவும் இருந்தால்தான் விநியோகம் தொடங்கும். இந்த மே மாதத்தில் இதை இந்தியாவில் மனிதர்களில் சோதனை செய்வதற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

அடார் பூனாவாலா
அடார் பூனாவாலா

கொரோனாவுக்கு எதிரான ஒரு சாத்தியமான அல்லது சிறந்த சிகிச்சையை அளிக்க அனைத்து சுகாதாரத்துறை நிறுவனங்களும் அயராது உழைத்து வருகின்றன. நாங்கள் முன்பு ஆக்ஸ்ஃபோர்டு குழுவுடன் இணைந்து மலேரியா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பணியாற்றியுள்ளோம். மேலும், எபோலா வைரஸுக்கான தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்தது அவர்கள்தாம். பொதுவாக அனைத்து நடைமுறைகளும் முடிந்து ஒரு தடுப்பூசி சந்தைக்கு வர குறைந்தது 12 - 18 மாதங்கள் ஆகும். ஆனால், இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தடுப்பு மருந்தை நாங்கள் தயாரித்துள்ளோம் என்பதில் நிச்சயமாகப் பெருமையடைகிறோம்.

கோவிட் 19 வைரஸூக்கான தடுப்பூசியை உருவாக்கத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்கெனவே எங்களிடம் உள்ளது. இதற்காக எங்கள் புனே உற்பத்தி நிறுவனம் சுமார் 500 - 600 கோடி ரூபாய் முதலீட்டு வசதி கொண்டுள்ளது. தற்போது எங்கள் அலகுகளில் ஒன்றில் அடுத்த 3 வாரங்களுக்குள் உற்பத்தியைத் தொடங்கவுள்ளோம். நாங்கள் மாதத்துக்கு 4 - 5 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

தடுப்பூசி
தடுப்பூசி
Representational image

இந்தத் தடுப்பூசி சோதனை வெற்றிபெற்றால் உற்பத்தியின் அடிப்படையை மாதத்துக்கு 10 மில்லியன் டோஸோசாக உயர்த்துவோம். செப்டம்பர் மாதத்துக்குள் சுமார் 20 - 40 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்து இந்தியா உள்பட பிற நாடுகளுக்கும் முடிந்தவரை கிடைக்கச் செய்வோம். இந்த நேரத்தில் தடுப்பூசியின் சரியான விலை வழங்குவது கடினமானது. எனவே, மலிவான விலைக்குக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம், ரூ.1000 வரை நிச்சயமாக வழங்க நினைத்துள்ளோம்” எனப் பல தகவல்களை கூறியுள்ளார்.

News Credits : Business Today