Published:Updated:

`வீட்டில் உறங்கும் பணம் மற்றவரின் பசிக்கு உதவட்டும்!'- உண்டியல் பணத்தை அரசுக்குக் கொடுத்த சிறுவன்

சிறுவன்  ரோமல்
சிறுவன் ரோமல்

பணம் எவ்வளவு என்பதைவிட, அந்தத் தொகையை நாட்டுக்காகக் கொடுத்த சிறுவனின் மனதைப் பாராட்ட வேண்டும்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு, மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவு
vikatan
உலகில் கொரோனா வைரஸ் தொற்றே ஏற்படாத நாடுகள் இவைதான்!

ஊரடங்கு உத்தரவினால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, இந்தியப் பொருளாதாரமும் பெருமளவு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்தக் கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டை மீட்டெடுக்க மக்கள் நிதியுதவி செய்து உதவுமாறு பிரதமர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார். பிரதமரின் வேண்டுதலுக்கு இணங்க, தொழிலதிபர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கிவருகின்றனர். இதையடுத்து, மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ரோமல், தன்னுடைய உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதியுதவியாக அரசுக்குக் கொடுத்து, பலரின் பாராட்டையும் பெற்றுவருகிறார்.

மிசோரத்தின் முதலமைச்சர் ஜோரம் தாங்கா, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில், "மக்கள் பலரும் உதவிக் கரம் நீட்டியுள்ள நிலையில், ஏழு வயது சிறுவன் ரோமல் தன்னுடைய உண்டியல் பணத்தை கொரோனா நிதியுதவியாக அரசிடம் கொடுத்தார். அதில் 333 ரூபாய் இருந்தது. பணம் எவ்வளவு என்பதைவிட, அந்தத் தொகையை நாட்டுக்காகக் கொடுத்த சிறுவனின் மனத்தைப் பாராட்ட வேண்டும். ரோமல் தான் நாட்டின் உண்மையான ஹீரோ" என்று பதிவிட்டுள்ளார்.

ரோமல் வழங்கிய பேட்டியில், "எல்லோரும் தங்களால் முடிந்த தொகையைக் கொடுத்து உதவுங்கள் என்ற பிரதமரின் அறிவிப்பை டி.வி-யில் பார்த்தேன். என் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அது என்னுடைய ரெண்டு வருட சேமிப்பு. கொரோனா பாதிப்பின் காரணமாக நிறைய பேர் அத்தியாவசிய பொருள்களுக்கே சிரம்மப்பட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில், யாருக்கும் உதவாமல் உண்டியலில் பணத்தை வைத்து என்ன பயன்? அந்தப் பணம் மற்றவர்களின் பசிக்கு உதவியாக இருக்கட்டுமே என்று, என் அப்பாவின் உதவியோடு காவல் துறையில் என் உண்டியலை ஒப்படைத்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு