Published:Updated:

Mannat : `6 மாடி; ரசிகர்களைக் காண பால்கனி; ரூ.200 கோடி மதிப்புடைய ஷாருக் கான் பங்களா!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீட்டில் ரசிகர்களை சந்திக்கும் ஷாருக் கான்.
வீட்டில் ரசிகர்களை சந்திக்கும் ஷாருக் கான்.

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கைதுசெய்யப்பட்ட பிறகு பாந்த்ராவிலுள்ள மன்னத் பங்களா சுற்றுலா மையமாக மாறியிருக்கிறது.

நடிகர் ஷாருக் கான் பாலிவுட் பாட்ஷா என்பதால், அவரின் இல்லம் மும்பையில் சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான இடமாக இருக்கிறது. மும்பை பாந்த்ரா கடற்கரையையொட்டி ஷாருக் கானின் மன்னத் பங்களா இருக்கிறது. இந்த பங்களாவுக்கு வெளியில் எப்போதும் ஷாருக் கான் ரசிகர்களும், சுற்றுலாப்பயணிகளும் குவிந்திருப்பார்கள். தற்போது, நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்ட பிறகு பாந்த்ராவிலுள்ள மன்னத் பங்களா சுற்றுலா மையமாக மாறியிருக்கிறது. பங்களாவுக்கு வெளியில் இருக்கும் சிறிய பூங்காவின் தடுப்புச் சுவர் ஷாருக் கான் பங்களாவை ஒட்டி இருக்கிறது. அங்கு ஷாருக் கான் எப்போதாவது வெளியில் வருவார் என்றும், அவரைப் பார்த்துவிடலாம் என்றும் நினைத்து பூங்காவின் சிறிய தடுப்புச் சுவரில் ரசிகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அமர்ந்திருப்பர். அருகில் கடற்கரையும் இருப்பதால் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஷாருக் கான் வீட்டுச் சுவரில் இருக்கும் `மன்னத்’ என்ற பெயர்ப்பலகை அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதை வழக்கமாகக்கொண்டிருக்கின்றனர். ரூ.200 கோடி மதிப்புள்ள ஷாருக் கான் பங்களா ஆறு மாடிகளைக்கொண்ட ஒரு புராதன கட்டடம். ஐந்து படுக்கை அறைகள் கொண்ட ஷாருக் கான் பங்களாவின் முன்னறைகள் ஓவியர் எம்.எஃப்.உசேன் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஷாருக் கான் தன் ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பதற்காக பால்கனியில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்.

மன்னத் பங்களா
மன்னத் பங்களா
`ஆர்யன்' என்று மகனுக்குப் பெயர் வைத்தது ஏன்? ஷாருக் கான் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

பிறந்தநாள் மற்றும் விழாக்காலங்களில் ஷாருக் கான் ரசிகர்களை பால்கனி வழியாகப் பார்ப்பது வழக்கம். வீட்டில் 12 இருக்கைகள்கொண்ட சாப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருக்கிறது. அதோடு வீட்டில் சமையல் அறை ஓர் இடத்தில் மட்டுமின்றி பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஷாருக் கான் இந்த பங்களாவை வாங்கும் முன்பு அதன் பெயர் 'வில்லா வியன்னா' என்று இருந்தது. 26,328 சதுர அடிகொண்ட இந்தக் கட்டடத்தை 2001-ம் ஆண்டு ஷாருக் கான் 13.32 கோடிக்குக் குத்தகைக்கு எடுத்தார். அதிலிருந்து ஷாருக் கான் ஒவ்வோர் ஆண்டும் மகாராஷ்டிரா அரசுக்குக் குத்தகைப் பணமாக 2,325 ரூபாய் கொடுத்துவருகிறார். ஷாருக் கானுக்கு துபாயில் ரூ.100 கோடி மதிப்பில் 'ஜன்னத்' என்ற கடற்கரையோர பங்களா ஒன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு