Published:Updated:

`இதைத்தான் பேசினோம்!' - வைரலாகும் சசி தரூர் - சுப்ரியா சுலே மீம்ஸுக்கு தந்த விளக்கம் என்ன?

Shashi tharoor

பாராளுமன்ற உரையின்போது, சுப்ரியா சுலே, தரூரிடம் பேச, தரூர் சுப்ரியா சுலேவின் அருகில் தள்ளி அமர்ந்து, மேசையின் மீது தலையை சாய்த்து, வெட்கத்தோடு தலையசைத்தபடி பேசுவதை எடுத்து பலரும் நகைப்புக்குரிய மீம்களையும், வீடியோ கிளிப்புகளையும் எடிட் செய்து பதிவேற்றி வருகின்றனர்.

ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின்  தலைவருமான ஃபரூக் அப்துல்லா பாராளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சுப்ரியா சுலேவிடம், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சசி தரூர் பேசிக்கொண்டிருந்தது கேமராவில் பதிவானது, அதைத் தனியாக எடுத்து சமூக வலைதளத்தில் மீம்களையும், சினிமா பாடல்களையும் இணைத்து வீடியோக்களையும் பறக்கவிட்டு வருகின்றனர், நெட்டிசன்கள். 

Shashi tharoor
Shashi tharoor

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாராளுமன்ற உரையின்போது, சுப்ரியா சுலே, தரூரிடம் பேச, தரூர் சுப்ரியா சுலேவின் அருகில் தள்ளி அமர்ந்து, மேசையின் மீது தலையை சாய்த்து, வெட்கத்தோடு தலையசைத்தபடி பேசுவதை எடுத்து பலரும் நகைப்புக்குரிய மீம்களையும், வீடியோ கிளிப்புகளையும் எடிட் செய்து பதிவேற்றி வருகின்றனர். இந்த மீம்களும் விடியோவும் வைரல் ஆகி வரும் நிலையில், அந்த வீடியோவில் என்ன பேசிக்கொண்டோம் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார், சசி தரூர். அதில் சுலே அடுத்து பேசவிருந்த நிலையில் பாலிசி குறித்த கேள்விகளைக் கேட்டார். அப்துல்லாவுக்குத் தொந்தரவு ஏற்படுத்தாத வகையில் அவர் மெதுவாகப் பேசியதால், அவர் பேசியதைக் கேட்பதற்காக சாய்ந்ததாகத் தெரிவித்துள்ளார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism