Published:Updated:

``ரூ.826 கோடி நன்கொடை..!” - ஷிவ் நாடார் மீண்டும் முதலிடம்

ஷிவ் நாடார்
News
ஷிவ் நாடார்

நாட்டிலேயே அதிக நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள் பட்டியல் வெளியீடு

இந்திய தொழிலதிபர்களில் நன்கொடை வழங்குவதில் 2018-ம் ஆண்டு ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் ஹெச்.சி.எல் நிறுவனம் ரூ.826 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர். 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. சுமார் 1,43,000 பேர் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

ஹெச். சி.எல் நிறுவனம்
ஹெச். சி.எல் நிறுவனம்

கம்பெனிகள் சட்டத்தின்படி, நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 2 சதவிகிதத்தை சமூக மேம்பாட்டுக்காகச் செலவிட வேண்டுமென்பது விதி. அதனடிப்படையில், ஒவ்வொரு நிறுவனங்களும் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு ஹெச்.சி.எல் நிறுவனம் ரூ.826 கோடி தொகைக்கு சமூகப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டும் நன்கொடை வழங்குவதில் ஷிவ் நாடார் முதலிடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டாவது இடத்தை விப்ரோ தலைவர் ஆஷிம் பிரேம்ஜி பெற்றுள்ளார். இவர், ரூ.453 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். நாட்டின் முதல் பணக்காரரான அம்பானி ரூ.402 கோடி நன்கொடை வழங்கி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். இன்போஸிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலகேனி தன் மனைவி ரோகிணியுடன் இணைந்து ரூ.346 கோடி மதிப்புக்கு அறப்பணிகள் மேற்கொண்டுள்ளார்.

ஆஷிம் பிரேம்ஜி
ஆஷிம் பிரேம்ஜி

Edelgive Foundation நிறுவனம் செய்த ஆய்வில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் ரூ.5 கோடிக்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2017-ம் ஆண்டு 38 பேர் ரூ.5 கோடிக்கு மேல் நன்கொடை வழங்கியிருந்தனர். கடந்த ஆண்டில் 72 பேர் ரூ.5 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் வழங்கிய நன்கொடை மட்டும் ரூ.4,391 கோடி ஆகும். கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு அதிக நன்கொடை கிடைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.