Published:Updated:

`முன்னோர்களின் மரபு போதும்; என் மார்பில் சுடுங்கள்!’ - சிஏஏ-வுக்கு எதிராக அசாதுதீன் ஓவைசி

அசாதுதீன் ஓவைசி
அசாதுதீன் ஓவைசி

`இதயத்தில் சுடுங்கள், அங்குதான் நான் இந்தியா மீது அன்பை வைத்திருக்கிறேன்' என அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் அசாதுதீன் ஓவைசி. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டங்களை குறிவைத்து வார்த்தைகளை வீசினர் பா.ஜ.கவினர். `டெல்லி, ஷாகீன்பாக் உடையதா அல்லது பாரத மாதாவின் மக்களுடையதா?' எனக் கொந்தளித்தார் அமித் ஷா. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரோ `துரோகிகளைக் கொல்லுங்கள்’ என்றார். இவர்களின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அசாதுதீன் ஓவைசி
அசாதுதீன் ஓவைசி

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூலில் பேசிய ஓவைசி, ` நீங்கள் எங்களைச் சுட்டுக் கொல்வீர்களா.. உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தோன்றுகிறதோ செய்துகொள்ளுங்கள். நான் இந்த தேசத்தில்தான் இருப்பேன். ஆனால், எந்த ஆவணங்களையும் உங்களிடம் காட்ட மாட்டேன். நீங்கள் என்னிடம் ஆவணங்களைக் கேட்டால் நான் உங்களுக்கு என்னுடைய மார்பைக்காட்டி சுட்டுத்தள்ளுங்கள் என்பேன். அப்போது நீங்கள் என்னுடைய இதயத்தில் சுடுங்கள். அங்குதான் நான் இந்தியா மீது அன்பை வைத்திருக்கிறேன்.

`துரோகிகளைக் கொல்லுங்கள்!’ அனுராக் தாக்கூரின் சர்ச்சைப் பேச்சால் அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்

நாட்டின் மீதான அன்பைக் காட்ட எங்களுடைய பெயர்கள் போதும். இந்தியா மீதான அன்பைக் காட்ட எங்கள் முன்னோர்களின் மரபு போதும். என்னிடம் எதுவும் இல்லை. என் தேசம்தான் எனக்கு எல்லாமும். நீங்கள் என் நாட்டை என்னிடமிருந்து பிரித்துச்செல்லப்போகிறீர்கள் என்றால் நான் உங்களுடன் வலிமையாகப் போராடுவேன். இந்தப்போரில் என் உயிரே போனால் வீரமிக்க ஒருவனாக இந்த மக்கள் என்னை நினைவில் வைத்திருப்பார்கள்.

அசாதுதீன் ஓவைசி
அசாதுதீன் ஓவைசி

அரசியலமைப்பை அழிப்பதில் மோடி குறியாக இருக்கிறார். அவர் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுகள் மூலம் மக்களை தவறாக நடத்துகிறார். இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்து நாட்டைப் பிளவுபடுத்தவே அவர் விரும்புகிறார். மோடி, அமித் ஷாவை எதிர்ப்பவர்கள் உண்மையான போராளிகள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு