Published:Updated:

`இதுதான் சோஷியல் டிஸ்டன்ஸ்...!' - கொரோனா விழிப்புணர்வுப் புகைப்படம்! #Viral

கொரோனாவைக் கட்டுப்படுத்த சோஷியல் டிஸ்டன்ஸ் தேவை
கொரோனாவைக் கட்டுப்படுத்த சோஷியல் டிஸ்டன்ஸ் தேவை

கொரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி கூறியது போல, மக்கள் சோஷியல் டிஸ்டன்ஸை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை.

கொரோனா வைரஸ் கேரளாவில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த மாநிலத்தில் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 560 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் நேற்று இரவு 12 மணி முதல் ஊடரங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி அறிவித்தார். கொரோனா நோய் வேகமாகப் பரவி வருவதால், இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினர் அறிவுரை, கொரோனா
காவல்துறையினர் அறிவுரை, கொரோனா

பஸ், ரயில், விமானப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்திய துறைமுகங்களுக்குள் நுழைய சரக்குக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படாததால், ஏராளமான சரக்குக் கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள் தவிர, மற்றவை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 21 நாள்கள் முடக்கம் காரணமாக இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதம் ஆகும்.

எனினும், கொரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி கூறியதுபோல, மக்கள் சோஷியல் டிஸ்டன்ஸை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை. மக்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி அமர்ந்துகொண்டும் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசிக் கொண்டும் இருக்கின்றனர். கொரோனா பாதித்தவரின் அருகில் இருப்பதன் மூலமாகதான் அது வேகமாகப் பரவுகிறது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளவில்லை. தற்போது, இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. கொரோனாவின் மூன்றாவது கட்ட பரவல்தான் சமூகப்பரவல். இதைத் தடுக்கத்தான் மத்திய மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கின்றன.

போலீஸார் எச்சரிக்கை
போலீஸார் எச்சரிக்கை

இந்தத் தருணத்தில், சோஷியல் டிஸ்டன்ஸின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், கேரள ரேஷன் கடை ஒன்றில் வாடிக்கையாளருக்கு அரிசி வழங்கப்பட்ட விதம் சமூக வலைதளத்தில் பரவலாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது ஒரு மீட்டர் நீளமான பிளாஸ்டிக் குழாய் ஒன்றின் வழியாக அரிசியை ரேஷன் கடை ஊழியர் வாடிக்கையாளரின் பையில் போடுகிறார்.

`சீக்கியர்களின் குருத்வாராவில் தீவிரவாதத் தாக்குதல்!’ - 11 பேர் பலி; பொறுப்பேற்றது ஐ.எஸ்

இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இந்தப் புகைப்படத்தை ரீட்விட் செய்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ``வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் இடையில் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி இருக்குமளவில் நடந்துகொள்ளுங்கள். கேரளா தனக்கே உரித்தான வகையில் சோஷியல் டிஸ்டன்ஸைக் கடைப்பிடிக்கிறது'' என்று பாராட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு