Published:Updated:

`வெளியேறமாட்டேன், சட்டப்படி சந்திப்பேன்!' -பாலியல் வழக்கில் சிக்கிய பிஷப்புக்கு எதிராக கன்னியாஸ்திரி

கன்னியாஸ்திரி லூஸி களப்புரா

கன்னியாஸ்திரியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கலுக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரி லூஸி களப்புரா சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

`வெளியேறமாட்டேன், சட்டப்படி சந்திப்பேன்!' -பாலியல் வழக்கில் சிக்கிய பிஷப்புக்கு எதிராக கன்னியாஸ்திரி

கன்னியாஸ்திரியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கலுக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரி லூஸி களப்புரா சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Published:Updated:
கன்னியாஸ்திரி லூஸி களப்புரா

சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளய்க்கல். அவர் கேரளாவில் உள்ள கான்வென்டில் கடந்த 2014 முதல் 2016 வரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் புகாரில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கலை கைதுசெய்ய கோரி கன்னியாஸ்திரிகள் கொச்சியில் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து பிஷப் பிரா,ங்கோ முளய்க்கல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்துவருகிறது.

பிஷப் பிராங்கோ முளய்க்கல்
பிஷப் பிராங்கோ முளய்க்கல்
இதற்கிடையில் பிஷப்புக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தரா என்பவர் கடந்த ஆண்டு அக்டோபரில் ஜலந்தரில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், பிஷப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளில் ஒருவரான சிஸ்டர் அனுபமாவை இடமாற்றம் செய்து சபை உத்தரவிட்டது அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கிய பிஷப் பிராங்கோ முளய்க்கலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி லூஸி களப்புரா என்பவரை சபையில் இருந்து நீக்கியுள்ளார்கள்.

இடமாற்றம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள்
இடமாற்றம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள்

கடந்த மே மாதம் 11-ம் தேதி டெல்லியில் நடந்த பொது கவுன்சிலில் கன்னியாஸ்திரி லூஸி களப்புராவை சபையைவிட்டு வெளியேற்ற ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் சபை வழங்கிய நோட்டீஸுக்கு சரியான விளக்கம் அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாலியல் வழக்கில் சிக்கிய பிஷப் பிராங்கோ முளய்க்கலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளைக் குறிவைத்து பழிவாங்கல் நடவடிக்கை பாய்வதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கன்னியாஸ்திரி லூஸி களப்புரா அளித்த பேட்டியில், ``சபையில் இருந்து நீக்கப்பட்டதற்கான கடிதம் கிடைத்தது. உடனடியாக சபையில் இருந்து வெளியேற மாட்டேன். இந்த நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism