பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய சில இந்தியச் சிப்பாய்கள் மத அடிப்படையில், பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கிரீஸ் தடவப்பட்ட குண்டுகள் பயன்படுத்துவதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். 1857-ம் ஆண்டு நடைபெற்ற இந்த போராட்டம்தான் இந்திய நாட்டின் முதல் சுதந்திரப் போர் எனக் கருதப்படுகிறது.

இந்தப் போரில் பங்கெடுத்த 282 இந்திய வீரர்களின் எலும்புக்கூடுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எழும்பு கூடுகள் அமிர்தசரஸ் அருகே அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டதாகப் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜே.எஸ்.செஹ்ராவத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது தொடர்பாகப் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜே.எஸ்.செஹ்ராவத், ``இந்த எலும்பு கூடுகள் 1857-ம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்தில் கொல்லப்பட்ட 282 இந்திய வீரர்களுக்குச் சொந்தமானது. இவை பஞ்சாப்பின் அமிர்தசரஸ் அருகே அஜ்னாலாவில் உள்ள ஒரு மதக் கட்டமைப்பின் அடியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டன.

இந்த வீரர்கள் பன்றி மற்றும் மாட்டிறைச்சி தடவப்பட்ட தோட்டாக்களைப் பயன்படுத்துவதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். இது தொடர்பாகச் செய்யப்பட்ட ஆய்வில் நாணயங்கள், பதக்கங்கள், டி.என்.ஏ ஆய்வு, அடிப்படை பகுப்பாய்வு, மானுடவியல், ரேடியோ-கார்பன் டேட்டிங், இவை அனைத்தும் இதையே சுட்டிக்காட்டுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.