Published:Updated:

பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகர் சோனு சூட் சகோதரி; ஆதரவும் எதிர்ப்பும்

சோனு சூட்டுடன் மால்விகா
News
சோனு சூட்டுடன் மால்விகா ( Twitter Photo: @SonuSood )

மாள்விகாவிற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று ஹர்ஜோத் கமால் தெரிவித்துள்ளார். அதோடு வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காவிட்டாலும் போட்டியிடப்போவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த மாதம் 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு அக்னிப் பரீட்சையாக அமைந்துள்ளது. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. மற்றொரு புறம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் பா.ஜ.கவோடு கூட்டணி அமைத்துள்ளார். இதனால் காங்கிரஸ் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் சோனு சூட் சகோதரி மாள்விகா சூட் சச்சார், காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். முதல்வர் சரண்ஜித் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சித்து ஆகியோர் முன்னிலையில் மாள்விகா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்காக மாள்விகா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருப்பதால், உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹர்ஜோத் கமால் இதனை விரும்பவில்லை.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாள்விகா
பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாள்விகா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாள்விகா காங்கிரஸ் கட்சியில் சேரும் நிகழ்ச்சியிலும் ஹர்ஜோத் கமால் கலந்து கொள்ளவில்லை. மாள்விகாவிற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதோடு வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காவிட்டாலும் போட்டியிடப்போவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால் மோகா தொகுதியில் போட்டியிட மாள்விகாவிற்கு காங்கிரஸ் தலைமை வாய்ப்புக் கொடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சோனு சூட் கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் சரண்ஜித் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போதே அவர் அரசியலில் ஈடுபடக்கூடும் என்ற செய்தி வெளியானது. ஆனால் அதனை சோனு சூட் மறுத்திருந்தார். மோகா நகரம், சோனு சூட்டுடைய சொந்த ஊர். எனவேதான் மாள்விகா அங்கு போட்டியிட விரும்புகிறார். மென்பொருள் பொறியாளரான, தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இளம்பெண்ணான மாள்விகாவின் வருகையை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவரும் வரவேற்றுள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் சித்து இது குறித்துக் கூறுகையில், ``மாள்விகா தேர்தல் ஆட்டத்தை மாற்றக்கூடியவர். முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவரும் ஒருவரது வீட்டிற்கு சென்று கவுரவப்படுத்துவது மிகவும் அபூர்வம்" என்று தெரிவித்தார்.

நவ்ஜோத் சிங் சித்து
நவ்ஜோத் சிங் சித்து

சமீபத்தில் சோனு சூட் தன் சகோதரியுடன் சேர்ந்து 1000 ஏழை மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கினார். அரசியலில் இணைந்துள்ள தன் சகோதரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள சோனு சூட், தனது சேவை தொடர்ந்து அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.