Published:Updated:

மும்பை: லைவ் செய்துகொண்டிருந்த தென்கொரிய பெண் யூடியூபர்... எல்லை மீறிய வாலிபர்கள் கைது!

பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த இரண்டு பேர்

மும்பையில் தென்கொரியப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

மும்பை: லைவ் செய்துகொண்டிருந்த தென்கொரிய பெண் யூடியூபர்... எல்லை மீறிய வாலிபர்கள் கைது!

மும்பையில் தென்கொரியப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:
பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த இரண்டு பேர்

உலகம் முழுவதும் யூடியூப் சேனல்கள் மூலம் சம்பாதிப்பது என்பது அதிகரித்திருக்கிறது. சிலர் யூடியூப் வீடியோவுக்காகப் பல கிலோமீட்டர் தூரத்துக்குச் செல்வதுண்டு. மும்பைக்கு தென்கொரியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.

மும்பை கார் ரோடு பகுதியில் நேற்று இரவு மியோசி என்ற தென்கொரியப் பெண் யூடியூபர் தன் சேனலுக்கு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியை அவர் நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த வாலிபர் ஒருவர், `உன்னுடைய வயது என்ன?’ என்று கேட்டார். அதோடு அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து, `வண்டிக்கு வா’ என்று அழைக்கிறார். அந்தப் பெண் `முடியாது முடியாது ’என்று கூறுகிறார். உடனே அந்தப் பெண் அங்கிருந்து சென்றார்.

மும்பை: லைவ் செய்துகொண்டிருந்த தென்கொரிய பெண் யூடியூபர்... எல்லை மீறிய வாலிபர்கள் கைது!

அப்படியும் விடாத அந்த வாலிபர் பைக்கில் தன் நண்பரை அழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் வந்து, `லிஃப்ட் தரவா?’ என்று கேட்டார். ஆனால் அந்தப் பெண் தனக்கு லிஃப்ட் தேவையில்லை என்றும், தன்னுடைய வீடு மிகவும் அருகில்தான் இருக்கிறது என்றும் அரைகுறை ஆங்கிலத்தில் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவை அந்தப் பெண் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு `இது போன்ற நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றும் `தண்டிக்காமல் விடக்கூடாது' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பெண்ணின் கையை பிடித்து இழுத்த இரண்டு பேர்
பெண்ணின் கையை பிடித்து இழுத்த இரண்டு பேர்

இரண்டாவதாக வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ``ஒருவர் என்னைத் துன்புறுத்தினார். குற்றவாளியுடன் வேறு ஒரு நபரும் இருந்ததால் நான் பிரச்னையைப் பெரிதாக்க விரும்பாமல் இருந்தேன். நான் பொதுமக்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியதால்தான் இது போன்று நடந்ததாகச் சிலர் சொல்கின்றனர்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவை பார்த்த போலீஸார் தாங்களே வழக்கு பதிவுசெய்து, இந்தக் காரியத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களையும் கைதுசெய்தனர். அவர்களின் பெயர் மொபீன் சந்த் மொகமத், மொகமத் சஹீப் என்று தெரியவந்தது. அவர்கள்மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.