Published:Updated:

ஆதார் அட்டைகளை அடகுவைத்து `வெங்காயம்’ கடன்! - உ.பியில் நூதன போராட்டம்

அதிகரித்துவரும் வெங்காய விலைக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலத்தில் விநோத போராட்டம் நடந்தது.

வெங்காயம்
வெங்காயம்

நாடு முழுவதும் விளைச்சல் குறைவு, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டிருக்கிறது. சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.150-ஐயும் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், விலை குறைந்தபாடில்லை. வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த 1.2 மெட்ரிக் டன் அளவுக்கு இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை கடந்த நவம்பர் 20ம் தேதி ஒப்புதல் அளித்தது. அதேபோல், வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய, மாநில அரசுகள் எச்சரித்திருக்கின்றன.

சமாஜ்வாதிக் கட்சி போராட்டம்
சமாஜ்வாதிக் கட்சி போராட்டம்
ANI

இந்த விவகாரத்தில் அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக் கட்சியின் இளைஞர் பிரிவினர் வாரணாசியில் விநோத போராட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதன்படி மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை அடகுவைத்து வெங்காயம் கடனாக வாங்கிச் செல்லலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்கிறது? - மக்களவையில் கனிமொழி கேள்வி

இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அக்கட்சி நிர்வாகி ஒருவர்,`` மக்களின் அன்றாடத்தேவையான வெங்காயத்தின் தொடர் விலை உயர்வுக்கு எதிராக எங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இதை செய்துவருகிறோம். ஆதார் அட்டை மட்டுமல்லாது வெள்ளிப் பொருட்களையும் அடகு வாங்கிக் கொண்டு வெங்காயத்தைக் கொடுத்து வருகிறோம். சில அடகுக் கடைகளில் வெங்காயத்தை லாக்கரில் வைத்து பூட்டவும் செய்திருக்கிறார்கள்’’ என்றார்.

வெங்காயம்
வெங்காயம்
மீண்டும் மிரள வைக்கும் வெங்காயம் விலை!- ஜனவரியில் குறைய வாய்ப்பு

மற்றொரு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் வெங்காய விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது. உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு வெளியே ஒரு கிலோ வெங்காயம் ரூ.40 என்ற விலையில் அக்கட்சியினர் கூவிக்கூவி விற்றனர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் நிர்வாகி சைலேந்திர திவாரி, ``வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. சாதாரண மக்களின் வலி என்ன என்பதைக் காதுகொடுத்துக் கேட்கும் நிலையில் அரசுகள் இல்லை’’ என்றார்.