Published:Updated:

பாட்னா: நடுவானில் இன்ஜினில் தீ... 180 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம்!

விமானம்

பாட்னாவிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற விமானம் நடுவானில் தீ பற்றியதால் மீண்டும் பாட்னாவில் தரை இறங்கியது.

பாட்னா: நடுவானில் இன்ஜினில் தீ... 180 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம்!

பாட்னாவிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற விமானம் நடுவானில் தீ பற்றியதால் மீண்டும் பாட்னாவில் தரை இறங்கியது.

Published:Updated:
விமானம்

பீகார் மாநிலம், பாட்னாவிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று காலை டெல்லிக்குப் புறப்பட்டது. அதில் 180 பயணிகள் பயணித்துள்ளனர். இந்த நிலையில், நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானத்தின் இடது இன்ஜினில் பறவை ஒன்று மோதியதாகக் கூறப்படுகிறது. அதனால், விமானத்தின் இடது இன்ஜினில் தீப்பற்றியிருக்கிறது. இதை தரையிலிருந்து பார்த்த மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து விமான ஓட்டிகள் சூழலை புரிந்துகொண்டு இடது இஞ்சினை நிறுத்திவிட்டு, விமானத்தை அவசர அவசரமாக பாட்னாவில் பாதுகாப்பாக தரை இறக்கினர். அதில் பயணித்த 185 பயணிகளும் காயமின்றி அதிஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இந்த விபத்து தொடர்பாக ஏவியேஷன் ரெகுலேட்டர் டி.ஜி.சி.ஏ வட்டாரங்கள், ``இந்த விபத்து பறவை மோதியதால் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி என்ஜினில் தீயை ஏற்படுத்துகின்றன. விமானிகள் சரியான நேரத்தில் என்ஜினை நிறுத்திவிட்டு, விமானத்தை தரையிறக்கி விட்டார்கள். அதனால் விபத்து தவிர்க்கப்பட்டது" என தகவல் தெரிவித்திருக்கின்றன.

மேலும் இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பாட்னா மாவட்ட நீதிபதி சந்திரசேகர் சிங், ``உள்ளூர்வாசிகள் விமானத்தில் தீப்பற்றியதைக் கண்டு மாவட்ட மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து டெல்லி செல்லும் விமானம் பாட்னா விமான நிலையத்துக்குத் திரும்பியது. 185 பயணிகளும் பத்திரமாக இறங்கினர்" என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism