ரஷ்யா - உக்ரைன் போரில் கர்நாடக மாநிலம், ஹாவேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவீன் என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உக்ரைனிலுள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்றுவந்தார். நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடா தன் மகனின் உடலை வீட்டுக்குக் கொண்டுவர உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கர்நாடக முதல்வர் இருவரையும் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``உக்ரைனில் இறந்த இந்திய மாணவர் நவீனின் உடல் பதப்படுத்தப்பட்டு மருத்துவமனையிலுள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப்பட்ட பிறகு, அவர் உடல் இந்தியா கொண்டுவரப்படும்'' என்றார்.
