Published:Updated:

வகுப்பில் திடீரென அசாதாரணமாக நடந்துகொண்ட மாணவர்கள்; அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்!

அசாதாரணமாக நடந்துகொண்ட மாணவர்கள் ( ட்விட்டர் )

மாணவிகள் சிலர் திடீரெனக் கத்துவது, அழுவது என அசாதாரணமாக நடந்துகொண்ட சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வகுப்பில் திடீரென அசாதாரணமாக நடந்துகொண்ட மாணவர்கள்; அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்!

மாணவிகள் சிலர் திடீரெனக் கத்துவது, அழுவது என அசாதாரணமாக நடந்துகொண்ட சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அசாதாரணமாக நடந்துகொண்ட மாணவர்கள் ( ட்விட்டர் )

உத்தரகாண்ட் மாநிலப் பள்ளியொன்றில், மாணவிகள் சிலர் திடீரென கத்துவது, அழுவது என அசாதாரணமாக நடந்துகொண்ட சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம், பாகேஷ்வர் மாவட்டத்திலுள்ள அரசு ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த செவ்வாயன்று, மாணவர்கள் சிலர் அசாதாரணமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்து மீண்டும் அடுத்தநாளும் அதேபோல் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

பள்ளி
பள்ளி
Pixabay

பின்னர் இந்தச் சம்பவம் பற்றி அறிந்துகொள்ள பள்ளிக்கு விரைந்த தனியார் ஊடகத்திடம் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியை விம்லா தேவி, ``கடந்த செவ்வாயன்று சில மாணவிகளும், ஒரு மாணவனும் வழக்கத்துக்கு மாறாக அசாதாரணமாக நடந்துகொண்டனர். அவர்கள் திடீரென அழுகிறார்கள், கத்துகிறார்கள், நடுங்குகிறார்கள். மேலும், எந்தக் காரணமுமின்றி தாங்களாகவே தலையில் அடித்துக்கொள்ள முயன்றனர். பின்னர் இது குறித்து தெரிவிக்க அவர்களின் பெற்றோர்களை நாங்கள் அழைத்தோம். இதைக் கூறியதும் அவர்கள் உள்ளூர் பாதிரியார் ஒருவரை வரவழைத்தனர். அதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில், ​​சில மாணவர்கள் மீண்டும் அதே போன்றே இன்றும் (வியாழன்) நடந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம்
மருத்துவம்

பள்ளி வளாகத்துக்குள் பூஜைசெய்ய வேண்டும் எனப் பெற்றோர்கள் வலியுறுத்தினர். அது மட்டுமல்லாமல் அவர்கள் பள்ளி அழிந்துவிட்டதாக நம்புகிறார்கள். மேலும் இந்த விவகாரத்தில், மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்பது அல்லது நம்பிக்கை சிகிச்சை (Faith Healing) பெறுவது என எதுவாக இருந்தாலும் நாங்கள் செய்வோம்" எனக் கூறினார்.

இது குறித்து டூன் மருத்துவக் கல்லூரியின் இயற்பியல் மருத்துவர் ஜெயா நவானி, ``மாணவர்களை எது தொந்தரவு செய்தது என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் உடலியல் நிபுணர்கள் இதை 'மாஸ் ஹிஸ்டீரியா' என்று உணர்கிறார்கள். உதாரணமாக, நம்பிக்கை சிகிச்சை என்பது மலைப்பகுதிகளில் ஒரு பொதுவான நடைமுறை. இதை அன்றாட வாழ்வில் அடிக்கடி அனுபவிக்கும் குழந்தைகளுக்கு இது மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்" என்று தெரிவித்தார்.