Published:Updated:

ரயில்வே வேலைக்கு இரண்டு கட்டத் தேர்வு; ரயிலுக்கு தீவைத்து தேர்வர்கள் போராட்டம் - என்ன நடந்தது?!

தீவைக்கப்பட்ட ரயில்
News
தீவைக்கப்பட்ட ரயில்

ரயில்வே வேலைக்கு இரண்டடுக்கு தேர்வு முறையை கொண்டு வந்ததை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு ரயிலுக்கும் தீவைத்தனர்.

ரயில்வே வேலைக்கு இரண்டு கட்டத் தேர்வு; ரயிலுக்கு தீவைத்து தேர்வர்கள் போராட்டம் - என்ன நடந்தது?!

ரயில்வே வேலைக்கு இரண்டடுக்கு தேர்வு முறையை கொண்டு வந்ததை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு ரயிலுக்கும் தீவைத்தனர்.

Published:Updated:
தீவைக்கப்பட்ட ரயில்
News
தீவைக்கப்பட்ட ரயில்

ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத சாதாரண பணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் கடந்த ஆண்டு தேர்வு நடத்தியது. மொத்தம் 35 ஆயிரம் காலி இடங்களுக்கு 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 60 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 15-ம் தேதி வெளியானது. வழக்கமாக பணிகளுக்கு ஆள்களை தேர்வு செய்ய ஒரு தேர்வு மட்டும்தான் ரயில்வேயில் நடத்தப்படும். ஆனால், இந்த முறை முதல் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு, இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால் முதற்கட்ட தேர்வில் தேர்ச்சியடைந்து வேலை கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பற்றி ஏரியும் தீ
பற்றி ஏரியும் தீ

அதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் பீகார் மாநிலம், கயா ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பயணிகள் ரயில் ஒன்றுக்கு தீ வைத்தனர். அதோடு மற்றொரு ரயில் மீது கல் வீசித்தாக்கினர். போலீஸாரால் மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஜஹனாபாத்தில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் கொடும்பாவியை ரயில் தண்டவாளத்தில் போட்டு எரித்தனர். போலீஸார் சிதாமரி ரயில் நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதே போன்று, பாட்னா உட்பட பீகாரின் பல்வேறு ரயில் நிலையங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு ரயில்வே தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்ட போது ஒரு தேர்வு மட்டும்தான் நடத்தப்படும் என்று கூறிவிட்டு இப்போது இரண்டாவது தேர்வை நடத்த முயல்வதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே
ரயில்வே

மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்வு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வி அடைந்த மாணவர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கமிட்டியில் பிப்ரவரி 12-ம் தேதி வரை தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினியும் மாணவர்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், குறைகள் தீர்க்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் போராட்டத்தால் மத்திய கிழக்கு ரயில்வேயில் அதிகமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.