Published:Updated:

இரவில் திடீர் ரெய்டு; பணியில் கவனக்குறைவு... 5 காவலர்களை லாக்கப்பில் அடைத்த உயரதிகாரி!

5 காவலர்களை லாக்கப்பில் அடைத்த உயரதிகாரி

பணியில் கவனக்குறைவாக இருந்த 5 போலீஸாரை லாக்கப்பில் அடைத்த பீகார் போலீஸ் கண்காணிப்பாளர்மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரவில் திடீர் ரெய்டு; பணியில் கவனக்குறைவு... 5 காவலர்களை லாக்கப்பில் அடைத்த உயரதிகாரி!

பணியில் கவனக்குறைவாக இருந்த 5 போலீஸாரை லாக்கப்பில் அடைத்த பீகார் போலீஸ் கண்காணிப்பாளர்மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Published:Updated:
5 காவலர்களை லாக்கப்பில் அடைத்த உயரதிகாரி

பீகாரில் உள்ள நவாடா நகரில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கவுரவ் மங்களா இரவு 9 மணிக்கு ரெய்டு சென்றார். இரவு பணியில் போலீஸ் நிலையத்திலிருந்த போலீஸார் கவனக்குறைவாக இருந்ததாகத் தெரிகிறது. இதனால் பணியிலிருந்த போலீஸாரைக் கடுமையாக திட்டிய கவுரவ், அதோடு விடாமல் 5 போலீஸாரை லாக்கப்பில் அடைக்க உத்தரவிட்டார். சப் இன்ஸ்பெக்டர் சத்ருகன், ராம்ரேகா சிங், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ், சஞ்சய் சிங், ராமேஷ்வர் ஆகியோரை லாக்கப்பில் அடைக்கும்படி இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிடம் கவுரவ் கேட்டுக்கொண்டார். மாவட்ட கண்காணிப்பாளர் சொல்வதால் அவர் பேச்சைத் தட்ட முடியாமல் ஐந்து பேரையும் லாக்கப்பில் பிடித்து அடைத்தார். அவர்கள் என்ன தவறு செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. இரண்டு மணி நேரம் கழித்து அவர்களை லாக்கப்பிலிருந்து திறந்துவிடும்படி கவுரவ் கேட்டுக்கொண்டார்.

லாக்கப்பில் போலீஸ்
லாக்கப்பில் போலீஸ்

போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த நிகழ்வு காலையில் வீடியோவாக வைரலாகி இருக்கிறது. ஐந்து போலீஸாரும் லாக்கப்புக்குள் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. இது போலியான செய்தி என்ற கவுரவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பீகார் போலீஸ் அசோசியேசன் தலைவர் மிருத்யுன்ஜே கூறுகையில், ``கவுரவிடம் பேச முயன்றேன். ஆனால் எனது அழைப்பை அவர் ஏற்கவில்லை. கவுரவ் போலீஸ் நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கவுரவ் அழிக்கக்கூடும். கவுரவ் செயல் போலீஸ் அதிகாரிகளின் மனநிலையை பாதிக்கும். எனவே கவுரவ்மீது வழக்கு பதிவுசெய்யவேண்டும்" என்று தெரிவித்தார். தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம் கடுமையான நடந்து கொள்ளவேண்டாம் என்று உயர் அதிகாரிகளுக்கு மாநில தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார்.