Published:Updated:

`பணத்தைச் செலுத்த 10 ஆண்டு கால அவகாசம்!’ - AGR விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம்
News
உச்ச நீதிமன்றம்

கட்டணங்களைச் செலுத்தத் தவறினால் அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கப்படும் என்றும் நீதிமன்ற அவமதிப்பாக அது கருதப்படும் என்றும் நீதிபதிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெலிகாம் நிறுவனங்கள் தங்களுடைய ஸ்பெக்ட்ரம் பயன்பாடு மற்றும் உரிமத்துக்காக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம்தான், ஏ.ஜி.ஆர் தொகை. இந்த ஏ.ஜி.ஆர் தொகை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக அதிருப்தி நிலவி வருகிறது.

AGR நீதிமன்றம்
AGR நீதிமன்றம்

இந்த நிலையில், உச்ச நீதிமன்றமானது ஏ.ஜி.ஆர் தொகையை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கட்ட வேண்டும் என அதிரடியான தீர்ப்பு ஒன்றை அளித்தது. அந்தத் தீர்ப்பில் 2020 ஜனவரி 23-ம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 1.47 லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்குச் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து, கட்ட வேண்டிய தொகையில் சுமார் 10 சதவிகிதத் தொகையை மார்ச் மாதம் 2020-க்குள் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தன.

Telecom Industry
Telecom Industry

இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றமானது தற்போது பரபரப்பான தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகை தொடர்பான வழக்கை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எஸ்.அப்துல் நசீர் மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இன்று விசாரித்தது. விசாரணையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையைச் செலுத்த, சுமார் 10 ஆண்டுகள் அவகாசம் அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

கட்டணங்களைச் செலுத்தத் தவறினால் அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கப்படும் என்றும் நீதிமன்ற அவமதிப்பாக அது கருதப்படும் என்றும் நீதிபதிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.