Published:Updated:

வலுக்கட்டாயமாக வெளியேற்றம்?! -கேரளாவின் செயலால் தெருவில் தஞ்சமடைந்த தமிழக தொழிலாளிகள்

கேரளாவில் தமிழர்கள்

கேரளாவிலிருந்து அவசர உதவிக்குப் பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் மூலம் கடந்த சில நாள்களாக 5,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வலுக்கட்டாயமாக வெளியேற்றம்?! -கேரளாவின் செயலால் தெருவில் தஞ்சமடைந்த தமிழக தொழிலாளிகள்

கேரளாவிலிருந்து அவசர உதவிக்குப் பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் மூலம் கடந்த சில நாள்களாக 5,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Published:Updated:
கேரளாவில் தமிழர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளா கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளாவில் தங்கி பணியாற்றி வந்த தமிழர்களை அங்குள்ள அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

வாளையார்
வாளையார்

முக்கியமாக, அவசர உதவிக்குப் பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் மூலம் கடந்த சில நாள்களாக 5,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால், கோவை அருகே உள்ள தமிழக கேரள எல்லையான வாளையார் மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் கூலித் தொழிலாளிகளாகப் பணியாற்றி வந்துள்ளனர். ஒரு மாதத்துக்கு முன்பு சென்றவர்கள், அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவையடுத்து அங்கிருந்து அவர்கள் கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.

தமிழர்கள்
தமிழர்கள்

இதனால், அவர்கள் சொந்த ஊருக்கே செல்ல முடிவெடுத்துள்ளனர். ஆனால், அது எளிதில் அமைந்துவிடவில்லை. கேரளா மாநிலத்தில் ஆட்டோ போன்ற சிறு வாகனங்கள் மூலம் எப்படியோ வாளையார் எல்லைப்பகுதிக்கு வந்துவிட்டனர்.

அங்கு சோதனை செய்யப்பட்டப் பிறகு அவர்கள் தமிழகத்துக்குள் விடப்பட்டனர். இதையடுத்து, அங்கிருந்த வாகனங்கள் மூலம் கோவை அவினாசி சாலையில் உலா வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களைப் பார்த்த போலீஸார், எல்.ஐ.சி அருகே அமர வைத்து அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்கினர்.

உணவு
உணவு

மேலும், அவர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கேரளாவில் கூலித்தொழில் செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, கேரள அதிகாரிகள் இன்று அதிகாலை, க.க சாவடி பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர். அங்கிருந்து எப்படி செல்வதென்று தெரியாமல் அதிகாலை முதல் அந்தக் கூலித்தொழிலாளிகள் சாலையில் நின்று கொண்டிருந்தனர்.

கூலித் தொழிலாளிகள்
கூலித் தொழிலாளிகள்

கேரள அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் எழுந்துள்ள நிலையில், அங்கிருந்து அனுப்பப்படும் தமிழர்கள் தங்களது வீடு திரும்ப உதவ வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

குறிப்பு: `கேரளாவில் இருந்து தமிழக தொழிலாளர்கள் அனுப்பப்படுவது தொடர்பான தகவல் வதந்தி' என சமூக ஊடகங்கள் மூலமாகத் தகவல் பரவுகிறது. அங்குள்ள களநிலவரங்களை தீர விசாரித்த பிறகும், குரல்பதிவு மூலம் ஊர்ஜிதம் செய்த பிறகே செய்தியைப் பிரசுரித்தோம். தற்போது மீண்டும் விசாரித்தபோது, கேரள எல்லையில் உள்ள தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் பலரும், `முன்பைவிட நிலைமை மிக மோசமாக இருக்கிறது' என வேதனைப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்கவேண்டுமே என்பதுதான் செய்தியின் நோக்கமே தவிர, வெறுப்பையோ பிரிவினையையோ பரப்புவது விகடன் நோக்கமல்ல. தமிழக - கேரள எல்லையில் நடக்கும் சோதனைகள் தொடர்பாக வாசகர்களிடம் ஆதாரப்பூர்வமான தகவல்கள் இருந்தால் பகிரலாம்!