Published:Updated:

`அளவுக்கு அதிகமாகக் குடிப்பவர்களுக்கென கோவாவில் புதிய வசதி' - கோவா போக்குவரத்துத் துறை அமைச்சர்

மௌவின் கோடின்ஹோ

சில நேரங்களில் குடிபோதையில் தள்ளாடிய படி வீடுகளுக்கு நடந்து செல்வதைக்கூடக் காணலாம்.

`அளவுக்கு அதிகமாகக் குடிப்பவர்களுக்கென கோவாவில் புதிய வசதி' - கோவா போக்குவரத்துத் துறை அமைச்சர்

சில நேரங்களில் குடிபோதையில் தள்ளாடிய படி வீடுகளுக்கு நடந்து செல்வதைக்கூடக் காணலாம்.

Published:Updated:
மௌவின் கோடின்ஹோ

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரே பார்த்தால் எப்படியும் ஒரு சிலர் குடிபோதையில் விழுந்து கிடப்பதைக் காணலாம். அவர்கள் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு வீட்டுக்குப் போக முடியாமல் அவ்வாறு விழுந்து கிடப்பர். சில நேரங்களில் குடிபோதையில் தள்ளாடிய படி வீடுகளுக்கு நடந்து செல்வதைக்கூடக் காணலாம். அதுபோன்று அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு வீட்டிற்குச் செல்ல முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு உதவ கோவா அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. கோவா பார்ட்டிகள் அதிகம் நடக்கும் நகரம்.

மாதிரி படம்
மாதிரி படம்

கோவாவுக்கு சுற்றுலா வருகிறவர்களும் அதிகம். சாலைப் பாதுகாப்பு வாரத்தைதொட்டி கோவா அரசு, அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டுக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டால், பார்கள் அல்லது ரெஸ்டாரென்ட்கள், டாக்சி வசதி ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களை வீடு அல்லது அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கவேண்டும் என்று கோவா அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மௌவின் கோடின்ஹோ இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ரெஸ்டாரென்ட் மற்றும் பார்களில் அளவுக்கு அதிகமாகக் குடிக்கும் வாடிக்கையாளர்கள் காரில் வந்திருந்தால் அவர்கள் குடித்துவிட்டு காரை ஓட்ட பார் நிர்வாகம் அனுமதிக்கக்கூடாது. அவர்களை பத்திரமாக வேறு ஒரு காரில் வீட்டில் கொண்டு போய் விட வேண்டும்.

மறு நாள் அவர்கள் தங்களது கார்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கவேண்டும். அளவுக்கு அதிகமாகக் குடிக்கும் வாடிக்கையாளர்களை பத்திரமாக வீட்டில் சேர்ப்பது பார் மற்றும் ரெஸ்டாரென்ட் பொறுப்பு ஆகும். இந்த விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும். அனைவரும் விதிகளைப் பின்பற்றவேண்டும். நீங்கள் வெளிநாடு சென்றால் விதிகளைப் பின்பற்றுகிறீர்கள் அல்லவா. அதே போன்று கோவாவிலும் விதிகளைப் பின்பற்றுங்கள் என்று தெரிவித்தார். கோவாவின் மக்கள் தொகை 15 லட்சம் மட்டுமே. ஆனால் தெருவிற்குத் தெரு மதுபானக்கடைகளைப் பார்க்க முடியும்.