Published:Updated:

`பொருளாதாரத்தை மீட்க முடியும்.. மக்களின் உயிரை..?!’ - லாக்டவுணை நீட்டிக்க கோரும் சந்திரசேகர ராவ்

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ் ( Twitter/@trspartyonline )

`பிரதமர் லாக் டவுண் தளர்த்துவது குறித்து இறுதி முடிவெடுக்கும் முன் அனைவரிடமும் விவாதிக்க வேண்டும். அனைத்து மாநில முதல்வருடன் விவாதிக்க வேண்டும்’ - சந்திரசேகர ராவ்

உலகம் முழுவதும் கொரோனா குறித்த பேச்சுதான். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மூன்று வாரங்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதில் தற்போது இரண்டு வாரங்களை நாம் கடந்துவிட்ட நிலையில் பலருக்கும் இருக்கும் கேள்வி இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதுதான்.

ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவு
vikatan

உண்மையில் இது தொடர்பான ஆலோசனைகள் நாடு முழுக்க நடைபெறத் தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிக்காத மாவட்டங்களில் ஏப்ரல் 14-க்குப் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து தீவிரமாக ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

`தொற்று கண்டறியப்படாத மாவட்டங்கள்..!’ -ஏப்ரல் 14-க்குப் பிறகு லாக்-டவுண் உத்தரவு தளர்த்தப்படுமா?

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடமும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், ``நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். உரிய நேரத்தில் நல்ல முடிவை அறிவிப்போம்’’ என்றார்.

ஊரடங்கு
ஊரடங்கு
மாதிரி புகைப்படம்

இந்த நிலையில், நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது. அப்போது முதல்வர் ஊரடங்கு உத்தரவு இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குத் தொடர வேண்டும் எனத் தெரிவித்தார்.

சந்திரசேகர ராவ் பேசுகையில், ``ஏப்ரல் 15 -க்குப் பிறகும் லாக் டவுண் உத்தரவு தொடரவே நான் விரும்புகிறேன். காரணம் நாம் நமது பொருளாதாரச் சிக்கலில் இருந்து எழுந்துவிடலாம்... ஆனால், மக்கள் உயிர் போனால், மீண்டும் அதைக் கொண்டுவர முடியாது. அதனால் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டும்” எனப் பிரதமருக்கு கோரிக்கை வைத்தார்.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

தொடர்ந்து பேசிய அவர், `` பிரதமர் லாக் டவுண் தளர்த்துவது குறித்து இறுதி முடிவெடுக்கும் முன் அனைவரிடமும் விவாதிக்க வேண்டும்.. அனைத்து மாநில முதல்வருடன் விவாதிக்க வேண்டும். உணர்வு ரீதியாக முடிவெடுக்க வேண்டும். காரணம், கொரோனாவுக்கு எதிராக லாக்டவுணைவிட சிறந்த மருந்தோ ஆயுதமோ எதுவும் இல்லை. நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் லாக் டவுணை நீட்டிப்பதுதான்” என்றார்.

`21 நாள்களுக்குப் பிறகு வேண்டாம்; இப்போதே சொல்லிவிடுங்கள்!’ -பிரதமரிடம் வலியுறுத்தும் திருமாவளவன்

தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை, கொரோனாவால் 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் பலியாகியுள்ளனர். முன்னதாக சந்தரசேகர ராவ், `லாக் டவுண் உத்தரவை மக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். தேவையில்லாமல் வெளியே வருவது தொடரக் கூடாது. தேவையில்லாமல் கண்டதும் சுட உத்தரவு வழங்க வைத்து விடாதீர்கள்’ என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அடுத்த கட்டுரைக்கு