Published:Updated:

தெலங்கானா: `முதல்வர்தான் பெயர் வைக்கவேண்டும்'- 9 ஆண்டுகளாகக் குழந்தைக்குப் பெயர் வைக்காத தம்பதி!

சந்திரசேகர் ராவ்

தெலங்கானாவைச் சேர்ந்த இதுவரை பெயர் வைக்கப்படாத ஒன்பது வயது சிறுமிக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று பெயர் சூட்டியுள்ளார்.

தெலங்கானா: `முதல்வர்தான் பெயர் வைக்கவேண்டும்'- 9 ஆண்டுகளாகக் குழந்தைக்குப் பெயர் வைக்காத தம்பதி!

தெலங்கானாவைச் சேர்ந்த இதுவரை பெயர் வைக்கப்படாத ஒன்பது வயது சிறுமிக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று பெயர் சூட்டியுள்ளார்.

Published:Updated:
சந்திரசேகர் ராவ்

பிறந்த குழந்தைக்கு, பிறந்த சில நாள்களிலேயே பெயர் சூட்டுவது என்பது வழக்கம். ஆனால் தெலங்கானாவைச் சேர்ந்த தம்பதியினர் தனது குழந்தைக்கு ஒன்பது வருடங்கள் கழித்து தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மூலம் பெயர் சூட்டியுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி சுரேஷ் - அனிதா. கே.சி.ஆர் என்று அழைக்கப்படும் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா மாநில இயக்கத்தில் இவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு 2013-ல் பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்தான் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளனர். ஆனால் ஒன்பது ஆண்டுகளாக அவர்களது ஆசை நிறைவேறாமல் இருந்திருக்கிறது. அதே சமயத்தில் ஒன்பது ஆண்டுகளாக அச்சிறுமிக்கு அவர்கள் பெயரும் வைக்கவில்லை. இதனால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியைச் சிலர் ‘சிட்டி’ என்று அழைத்துள்ளனர்.

அந்தே சிறுமியின் ஆதார் அட்டையிலும் ‘சிட்டி’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள அக்கம்பக்கத்தினர் மற்றும் தெரிந்தவர்கள் எல்லோரும் முதலமைச்சரால் பெயரிடக் காத்திருக்கின்றனர் என்பதை அறிந்ததால் ‘KCR’ (கே.சந்திரசேகர ராவ்) என்றும் அழைத்திருக்கின்றனர்.

சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

இந்நிலையில் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் சட்டசபை சபாநாயகருமான மதுசூதனா சாரிக்கு, சமீபத்தில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. பின்னர் அவர் அந்தத் தம்பதியையும், குழந்தையையும் தெலங்கானா முதல்வரின் அதிகாரபூர்வ இல்லமான பிரகதி பவனுக்கு நேரடியாக அழைத்துச் சென்றுள்ளார்.

இத்தகவலைக் கேள்விப்பட்ட தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், சுரேஷ் மற்றும் அனிதாவை வாழ்த்தி, அவர்களது ஒன்பது வயதுக் குழந்தைக்கு 'மஹதி' என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும் முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் குழந்தை மஹதிக்குப் பரிசுகளை வழங்கியதோடு, அவரின் கல்விக்கான நிதியுதவியையும் அறிவித்துள்ளனர். தலைவர்தான் பெயர்சூட்ட வேண்டும் என்று காத்திருந்த தம்பதிகளின் செயலும், தகவல் தெரிந்தவுடன் அதனை நிறைவேற்றிய முதல்வர் சந்திரசேகர் ராவ் குறித்த செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.