Published:Updated:

`வீடு தேடி வரும் இன்டர்நெட், ஜெராக்ஸ் சேவை!’- இளைஞரின் சாதனைக்குக் காரணமான ஒருநாள் வேதனை

Internet
Internet

மொபைல் இன்டர்நெட் வசதி மூலம் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவி வருகிறார் தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

தற்போதுள்ள டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போன், இன்டர்நெட் பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். செய்திகள், படங்கள், பாடல் போன்ற அனைத்தும் சிறிய செல்போனிலேயே அடங்கிவிடுகின்றன. ஆனால், அரசு வேலைக்கு விண்ணப்பிக்கவும் இன்னும் பிற வசதிகளுக்காகவும் இன்டர்நெட் சென்டரை அணுக வேண்டிய நிலை தற்போதும் உள்ளது.

Job
Job

அதிலும், கிராமங்களில் வாழும் மக்களுக்கு இந்த வசதிகள்கூட இல்லை. அவர்கள் இன்டர்நெட் சென்டர் அல்லது ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்றாலும் பல கிலோமீட்டர்கள் கடந்து நகரத்துக்குத்தான் வரவேண்டிய சூழல் நிலவுகிறது. இவர்களின் நலனுக்காக மொபைல் இன்டர்நெட் சென்டரை அவர்களின் கிராமத்துக்கே கொண்டு செல்கிறார் தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

``அமித் ஷா பயந்துவிட்டார்; விரைவில் முதல்வராவார் ஸ்டாலின்!” - உதயநிதி

அலீஷ் பாபு என்ற 29 வயதுடைய இளைஞர் தெலங்கானாவின் கம்மம் (Khammam) மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 2016-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.டெக் முடித்துள்ளார். அதன்பிறகு பல நிறுவனங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். எங்கு தேடியும் வேலை கிடைக்காதநேரத்தில் இவருக்காக ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

Mobile internet
Mobile internet
Facebook

அதைச் சரியாகப் பயன்படுத்தி வேலை பெற்றே ஆக வேண்டும் என நினைத்துள்ளார். அதற்காகச் சான்றிதழை நகல் எடுக்க தன் கிராமத்தைச் சுற்றித் தேடி அலைந்துள்ளார். எங்கு தேடியும் ஒரு ஜெராக்ஸ் கடை கூட அவரது கண்ணில்படவில்லை. இறுதியில் ஒரு கடை இருந்தும் அங்கு மின்சாரம் இல்லாததால் அவரால் சரியான நேரத்தில் வேலைக்குப் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் அந்த வேலையும் அலீஷுக்கு இல்லாமல் போய்விட்டது.

`ஆறு மாதங்களாகக் கிடந்த சடலம்!'- நடிகர் நாகார்ஜுனாவைச் சுற்றும் பண்ணைவீடு சர்ச்சை

ஆனால், அவர் சுற்றித் திரிந்த அந்த ஒருநாள்தான் அலீஷ் வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. ஒரு ஜெராக்ஸ் எடுக்க முடியாமல் தான் வேலை இழந்ததுபோல் தெலங்கானாவில் இன்னும் எத்தனை பேருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கும் என்பதை யோசித்திருக்கிறார்.

Aleesh
Aleesh
Facebook

இந்தநிலையை மாற்ற வேண்டும் என்று எண்ணி, ஒரு ஐடியாவுடன் வங்கி அதிகாரிகளைச் சென்று சந்தித்து தன் தொழிலுக்கு லோன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அனைத்தும் சரியாக இருந்ததால் அலீஷுக்கு 6.5 லட்சம் ரூபாய் லோன் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை வைத்து ஒரு ட்ரக்கை வாங்கி அதன்பின் பகுதியில் சிறிய ரூம் போன்று செட் செய்து அதில், இன்டர்நெட் வசதிகளுடன் கூடிய கம்ப்யூட்டர், சிறிய மற்றும் பெரிய ஜெராக்ஸ் மெஷின்கள், பிரின்ட் மெஷின் ஆகியவற்றை வாங்கிவைத்து மொபைல் இன்டர்நெட் வசதியை உருவாக்கியுள்ளார்.

தினமும் காலை 9 மணி முதல் இரவு வரை தன் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு அந்த வண்டியை ஓட்டிச் சென்று அங்குள்ள இளைஞர்கள் மற்றும் மக்களுக்குக் குறைந்த விலையில் ஜெராக்ஸ் மற்றும் இணைய வசதிகளை ஏற்படுத்தித் தருகிறார். அதிநவீன பேட்டரிகளின் உதவியுடன் தன் இயந்திரங்களுக்குத் தேவையான மின்சாரத்தையும் பெறுகிறார். இதனால் கிராமத்தில் உள்ள பல இளைஞர்கள் எளிதாக வேலைக்கு விண்ணப்பிக்க முடிகிறது. மக்களுக்குத் தேவைப்படும் அரசு சேவைகளுக்கும் விண்ணப்பிக்க முடிகிறது.

பணம் சம்பாதிப்பது முக்கியம் இல்லை. மக்களுக்குச் சேவை செய்து, வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவுவதே என் இலக்கு.
அலீஷ்

மக்கள் அனைவரும் கியூவில் நின்று தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுச் செல்வதாக அலீஷ் கூறியுள்ளார். மேலும், `` நான் தினமும் செய்தித்தாள்களில் வரும் வேலைவாய்ப்பு பகுதிகளை ஜெராக்ஸ் எடுத்து கிராமங்களில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வழங்கி வருகிறேன். ஒருநாளைக்கு இரண்டு கிராமம் எனச் சுற்றிவருகிறேன். இந்த மொபைல் இன்டர்நெட் சேவை மூலம் மாதத்துக்கு 30,000 ரூபாய் வரை வருமானம் வருகிறது. அதில் பாதி வட்டி கட்டவும் மீதமுள்ள தொகையில் வண்டிக்கு டீசல் போடவும் பயன்படுத்திக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவரின் முயற்சி பற்றிய உங்கள் கருத்தை கமென்டில் பதிவு செய்யுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு