Published:Updated:

குஜராத் மோர்பி பாலம்: ``விபத்து கடவுளின் விருப்பத்தால் நடந்தது!" - கைதானவர் நீதிமன்றத்தில் பேச்சு

குஜராத் பாலம் விபத்து

``கேபிள் உடைந்த இடத்தில் துருப்பிடித்திருந்திருக்கிறது. கேபிளைச் சரிசெய்திருந்தால், இந்தச் சம்பவம் நடந்திருக்காது" என நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

குஜராத் மோர்பி பாலம்: ``விபத்து கடவுளின் விருப்பத்தால் நடந்தது!" - கைதானவர் நீதிமன்றத்தில் பேச்சு

``கேபிள் உடைந்த இடத்தில் துருப்பிடித்திருந்திருக்கிறது. கேபிளைச் சரிசெய்திருந்தால், இந்தச் சம்பவம் நடந்திருக்காது" என நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

Published:Updated:
குஜராத் பாலம் விபத்து

குஜராத்தில், கடந்த ஞாயிறு அன்று சாத் பூஜை கொண்டாட்டத்தின்போது, புதுப்பிக்கப்பட்ட 150 ஆண்டுகள் பழைமையான மோர்பி கேபிள் பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில், பாலத்திலிருந்த 500-க்கும் மேற்பட்டோரில் சுமார் 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தால் மக்கள் சோகத்தில் மூழ்கிய அதே சமயம், குஜராத் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்தன. மேலும், அரசின் அனுமதியோ, தரம் தொடர்பான பரிசோதனையோ இன்றி, கடந்த அக்டோபர் 26-ம் தேதி பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகின.

குஜராத்: அறுந்து விழுந்த கேபிள் பாலம்
குஜராத்: அறுந்து விழுந்த கேபிள் பாலம்
ட்விட்டர்

பின்னர் பாலத்தைப் புதுப்பித்த `ஓரேவா' நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேரை போலீஸார் கைதுசெய்தனர். அதைத் தொடர்ந்து, கைதுசெய்யப்பட்டவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். அப்போது ஓரேவா நிறுவனத்தின் மேலாளர் தீபக் பரேக், ``கடவுளின் விருப்பத்தால் இது போன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நடந்தது" எனத் தலைமை ஜூடிஷியல் மாஜிஸ்ட்ரேட் எம்.ஜே.கான் முன்னிலையில் கூறினார். இந்த நிலையில் ஓரேவா நிறுவனத்தின் மேலாளரின் இத்தகைய கருத்து சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இது ஒருபுறமிருக்க, மோர்பி துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.ஏ.சாலா, பாலம் விபத்து குறித்து, ``பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு ஆகியவற்றின் ஒரு பகுதியாக, தளம் மட்டுமே மாற்றப்பட்டது. பாலம் இருந்த கேபிளில் எண்ணெயோ, கிரீஸோ எதுவும் தடவவில்லை. மேலும், கேபிள் உடைந்த இடத்தில் துருப்பிடித்திருந்திருக்கிறது. கேபிளைச் சரிசெய்திருந்தால், இந்தச் சம்பவம் நடந்திருக்காது" என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.