Published:Updated:

தாலிபன் - ஆர்எஸ்எஸ் ஒப்பீடு: `பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மன்னிப்பு கேட்க வேண்டும்'- பாஜக கோரிக்கை!

ஜாவேத் அக்தர்
ஜாவேத் அக்தர்

தாலிபான்களுடன் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை ஒப்பிட்ட பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், தாலிபன்களின் செயல்கள் காட்டுமிராண்டித்தனமானது. அவர்களின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தளம் போன்ற அமைப்பை ஆதரிப்பவர்களின் நடவடிக்கைகளும் அது போன்றதுதான். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்தியாவில் வசிக்கும் மக்களின் பெரும்பாலானோர் மதசார்பற்றவர்கள். எனவே ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி போன்ற அமைப்பை ஆதரிப்பவர்கள் நாஜி கொள்கையை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார். ஜாவேத் அக்தரின் இந்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்: `ராணுவத் தளவாடங்களை விட்டுச் சென்ற அமெரிக்கா; கையிலெடுத்த தாலிபன்!' - என்ன நடக்கிறது?
ராம் கதம்
ராம் கதம்

இது தொடர்பாக மும்பை பாஜக எம்.எல்.ஏ. ராம் கதம் அளித்த பேட்டியில், "அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்போடு தொடர்புடையவர்கள் இருக்கிறார்கள். இத்தலைவர்கள் ராஜ்தர்மத்தின் அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்கின்றனர். அவர்கள் தாலிபன்களை போன்று இருந்தால் ஜாவேத் அக்தர் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட முடியுமா?. அக்தரின் இந்த அறிக்கை ஏழைகளுக்காகப் பாடுபடும் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்தி இருக்கிறது. ஜாவேத் தனது அறிக்கைக்காக மன்னிப்பு கேட்கவில்லையெனில் அவரது படங்களை ஓட விடமாட்டோம்" என்று தெரிவித்தார். பாஜக இளைஞரணியினர் மும்பையில் உள்ள ஜாவேத் அக்தரின் இல்லம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட பாஜக பிரமுகர் ஒருவர் கூறுகையில், "ஜாவேத் அக்தர் மனநிலை சரியில்லாதவர் என்று நினைக்கிறோம். அக்தருக்கு நாடு அனைத்தையும் கொடுத்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். நாட்டின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்காக பாடுபட்டு வருகிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை அக்தர் தாலிபன்களோடு ஒப்பிட்டு இருக்கிறார். இதனை ஏற்க முடியாது. அக்தர் மன்னிப்பு கேட்கவேண்டும். மன்னிப்பு கேட்கவில்லையெனில் எங்களது போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு