Published:Updated:

சாலையில் வாக்குவாதம்... கார் ஜன்னல்வழியே தொங்கிய நிலையில் 2 கி.மீ தொழிலதிபரை இழுத்துச் சென்ற நபர்

காயமடைந்த ஷா

மும்பையில் காரை முந்திச்செல்ல முயன்றதால், ஒரு தொழிலதிபரை காரில் பாதி உடல் வெளியில் தொங்கிய நிலையில் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் வாக்குவாதம்... கார் ஜன்னல்வழியே தொங்கிய நிலையில் 2 கி.மீ தொழிலதிபரை இழுத்துச் சென்ற நபர்

மும்பையில் காரை முந்திச்செல்ல முயன்றதால், ஒரு தொழிலதிபரை காரில் பாதி உடல் வெளியில் தொங்கிய நிலையில் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
காயமடைந்த ஷா

மும்பை கோரேகாவ் பகுதியைச் சேர்ந்த ஜெய்காந்த் ஷா என்ற தொழிலதிபர் வெளியில் சென்றுவிட்டு தனது காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். கார் சாந்தாகுரூஸ் என்ற இடத்தில் சென்றபோது சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருந்தது. அவரின் காருக்கு முன்னால் சிறிய இடம் கிடந்தது. அந்த இடத்தை நோக்கி ஷா தனது காரை நகர்த்தினார். அதேநேரத்தில் மற்றொரு கார் டிரைவரும் தனது காரை அதே இடத்துக்கு நகர்த்த முயன்றார். ஆனால் ஷா தனது காரை முன்னகர்த்திச் சென்றார். அந்நேரம் அவரின் காரைப் பின்தொடர்ந்து வந்த மற்றொரு கார் டிரைவர் ஷாவின் காரை நிறுத்தும்படி சைகை செய்தார். ஷாவும் காரை நிறுத்தினார். உடனே அந்த காரில் இருந்தவர் `ஏன் காரை முன்னோக்கிக் கொண்டு வந்தாய்?’ என்று கேட்டு கண்டபடி திட்ட ஆரம்பித்தார். ஷா காரிலிருந்து இறங்கி வந்து தன்மீது எந்தத் தவறும் இல்லை என்று சொல்ல முயன்றார்.

காயமடைந்த ஷா
காயமடைந்த ஷா

ஆனால் அதைக் கேட்காமல் காரில் இருந்த நபர் ஷாவை அடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஷா, தான் போலீஸில் புகார் செய்யப்போவதாகக் கூறி அந்த கார் நம்பர் பிளேட்டை போட்டோ எடுத்தார். உடனே காரில் இருந்த நபர் ஷாவிடமிருந்து போனை பிடுங்கிக்கொண்டார். ஷா தனது போனை எடுக்க தனது தலையை கார் ஜன்னல் வழியாக உள்ளேவிட்டார். உடனே காரில் இருந்தவர் காரைக் கிளப்பிவிட்டார். ஷாவின் பாதி உடல் காருக்கு வெளியில் தொங்கிய நிலையில் இருந்தது.

தன்னை விட்டுவிடும்படி ஷா கெஞ்சினார். ஆனால் காரில் இருந்த நபர் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு ஷாவை அப்படியே காரில் இழுத்து ச்சென்றதோடு போனில் இருந்த போட்டோவை டெலிட் செய்துவிட்டு போனை தூக்கி வெளியில் போட்ட பிறகே ஷாவை வெளியில் தள்ளிவிட்டுக் கிளம்பினார். இதனால் ஷாவின் கால் உடைந்துள்ளது. அதோடு கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. ஷா ஆட்டோ பிடித்து தனது கார் நின்ற இடத்துக்கு சென்று தனது நண்பரை வரவழைத்து மருத்துவமனைக்குச் சென்றார். அதோடு இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து கார் ஓட்டிய நபரைப் பிடித்து விசாரித்தனர். அவரின் பெயர் ரவி என்று தெரிய வந்துள்ளது. விசாரணைக்குப் பின் போலீஸார் அவரை விடுவித்துவிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஷா அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism