Published:Updated:

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்; தற்கொலை செய்த மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை!

மகாராஷ்டிராவில் பெய்த கனமழையில் வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் இறந்து போன மகளை ஒருவர் தனது தோளில் சுமந்து ஆற்றை கடந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவ மழை இன்னும் பெய்து கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள போஜ்காவ் என்ற கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக அந்த கிராமத்தில் ஆற்றை கடப்பதற்காக இருந்த ஒரு பாலத்தையும் மழை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. இதனால் மக்கள் கிராமத்தில் இருந்து வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இக்கிராமத்தில் துக்காராம் என்ற விவசாயின் மகள் காலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனைக்கு ஆற்றை கடந்து அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் சுகாதார மையத்திற்கு உடலை கொண்டு செல்லவேண்டும்.

மழை வெள்ளம்
மழை வெள்ளம்

ஆனால் ஆற்றை கடக்க இருந்த ஒரே பாலமும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் மாட்டு வண்டி மூலம் ஆற்றை கடக்கலாம் என்று நினைத்தனர். போலீஸார் மாட்டு வண்டியில் தற்கொலை செய்த பெண்ணின் உடலை ஏற்றி ஆற்றை கடக்க முயன்றனர். ஆனால் மாடு ஆற்றை கடக்க மறுத்துவிட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தனது மகளின் உடலை தானே தோளில் சுமந்து ஆற்றை கடப்பதாக துக்காராம் தெரிவித்தார். கிராமத்தினரும் இதைத்தவிர வேறு வழியில்லாத காரணத்தால் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து துக்காராம் தனது மகளின் உடலை தோளில் சுமந்து கொண்டு மெதுவாக ஆற்றை கடந்தார். அவருடன் பணியில் இருந்த போலீஸார், கிராம மக்கள் சிலரும் ஆற்றை கடந்து சென்றனர். ஆற்றை கடக்க இருந்த ஒரே பாலமும் அடித்து செல்லப்பட்டுவிட்டதால் இனி ஆற்றை எப்படி கடப்பது என்று தெரியாமல் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். புதிதாக பாலம் கட்டுவதாக இருந்தாலும் அதற்கு அரசின் ஒப்புதல் கிடைத்து கட்டுவதற்கு ஒரு வருடம் வரை ஆகும் என்று கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா மழை வெள்ளம்: நிலச்சரிவில் சிக்கி 251 பேர் உயிரிழப்பு; 100 பேர் மாயம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு