Published:Updated:

மாணவியாக 3 மாதங்கள்... ராகிங்கில் ஈடுபட்ட 11 சீனியர் மாணவர்களைச் சிக்கவைத்த பெண் காவலர் சாலினி!

மாணவியாக, கான்ஸ்டபிளாக சாலினி

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 11 மாணவர்களை பெண் கான்ஸ்டபிள் ஒருவர் மூன்று மாதங்கள் விசாரித்து, கண்டுபிடித்திருக்கிறார்.

மாணவியாக 3 மாதங்கள்... ராகிங்கில் ஈடுபட்ட 11 சீனியர் மாணவர்களைச் சிக்கவைத்த பெண் காவலர் சாலினி!

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 11 மாணவர்களை பெண் கான்ஸ்டபிள் ஒருவர் மூன்று மாதங்கள் விசாரித்து, கண்டுபிடித்திருக்கிறார்.

Published:Updated:
மாணவியாக, கான்ஸ்டபிளாக சாலினி

கல்லூரிகளில், குறிப்பாக மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வது தொடர்கதையாகிவருகிறது. இந்த ராகிங் சில நேரங்களில் மிகவும் மோசமாக இருக்கும். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் அதிக அளவு ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக போலீஸாருக்குப் புகார் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தெஹ்சீப் காஜி ராக்கிங் செய்பவர்களைப் பிடிக்க முடிவுசெய்தார். இதற்காக பெண் கான்ஸ்டபிள் சாலினி சௌகான் (24) பணியில் நியமிக்கப்பட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் காஜி கூறுகையில், ``அடிக்கடி எங்களுக்கு மர்ம நம்பரிலிருந்து ராகிங் நடப்பதாகப் புகார் வந்தவண்ணம் இருந்தது. சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை மோசமான, ஆபாசமான செயலில் ஈடுபடவைத்துள்ளனர்.

மாணவியாக 3 மாதங்கள்... ராகிங்கில் ஈடுபட்ட 11 சீனியர் மாணவர்களைச் சிக்கவைத்த பெண் காவலர் சாலினி!

தலையணையில் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள சொல்லி துன்புறுத்தியிருக்கின்றனர். புகார் செய்த மாணவர்கள் பயம் காரணமாக தங்களது பெயர்களைச் சொல்ல முன்வரவில்லை. உடனே நாங்கள் கல்லூரி கேம்பஸுக்குச் சென்று சோதனை செய்தோம். நாங்கள் சீருடையுடன் வந்ததைப் பார்த்த மாணவர்கள் அச்சம் காரணமாகப் புகார் செய்ய முன்வரவில்லை. புகார் செய்த மாணவர்களின் மொபைல் நம்பரை ட்ராக் செய்து கண்டுபிடிக்க திட்டமிட்டோம்.

ஆனால் ஹெல்ப்லைன் சட்டத்தில் அதற்கு இடமில்லை. இதனால் சாலினி உட்பட சில கான்ஸ்டபிள்களை சாதாரண உடையில் கல்லூரி வளாகத்தில் உலாவவிட்டோம். அவர்கள் மாணவர்களுடன் டீக்கடை, கேன்டீன்களில் கலந்துரையாடுவார்கள். ஜூனியர் மாணவர்களிடம் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு ராகிங்கின்போது சந்தித்த கொடுமைகள் குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டோம். இதன் மூலமே சாட்சியைக் கண்டுபிடித்து, ராகிங் செய்தவர்களைக் கண்டுபிடித்து கைதுசெய்தோம்” என்றார்.

தினமும் மாணவியைப்போல் உடையணிந்து கல்லூரிக்குச் சென்ற கான்ஸ்டபிள் சாலினி இது குறித்து கூறுகையில், ``இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. மாணவியைப்போல் உடையணிந்து கொண்டு தினமும் கல்லூரிக்குச் செல்வேன். மாணவர்களோடு கேன்டீன்களில் பேச ஆரம்பித்தேன். என்னைப் பற்றி முதலில் அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

அதன் பிறகுதான் அவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்” என்றார். `மாணவர்கள் உங்கள்மீது சந்தேகப்பட்டிருக்கிறார்களா?’ என்று கேட்டதற்கு, ``சில நேரங்களில் மாணவர்கள் என்னிடம் கேள்வி கேட்பார்கள். அந்நேரம் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் வேறு எதைப் பற்றியாவது பேசி, பேச்சை மாற்றிவிடுவேன். கேன்டீனில் அதிக கூட்டம் இருக்கும். எனவே, மாணவர்கள் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். புத்தகங்கள் இருக்கும் பேக்கை எடுத்துக்கொண்டு ஒரு மாணவர் எப்படி இருப்பாரோ அதே போன்று நான் கல்லூரிக்குச் சென்றேன். மொத்தம் மூன்று மாதங்கள் மாணவியாக நான் நடித்தேன்.

மாணவியாக கான்ஸ்டபிளாக சாலினி
மாணவியாக கான்ஸ்டபிளாக சாலினி

இதில் ராகிங்கில் ஈடுபட்ட 11 சீனியர் மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதோடு அவர்கள் அனைவரும் கல்லூரி விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்” என்றார். சாலினி சில நேரங்களில் நர்ஸ் போன்று உடையணிந்தும் சென்றிருக்கிறார். தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை கல்லூரியில் செலவிட்டதாகவும் சாலினி தெரிவித்திருக்கிறார். பிடிபட்ட 11 மாணவர்களில் 9 பேர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மாணவியாக நடித்து ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டுபிடித்ததில் முக்கியப் பங்கு வகித்த கான்ஸ்டபிள் சாலினிக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.