Published:Updated:

அப்துல் கலாம் தீவிலிருந்து பாய்ந்த அக்னி 3! - முதல்முறையாக இரவில் நடந்த சோதனை

அக்னி 3 ஏவுகணை நேற்று முதல் முறையாக இரவு நேரத்தில், அப்துல் கலாம் தீவிலிருந்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

அக்னி 3
அக்னி 3 ( மாதிரி புகைப்படம் )

ஒடிசா மாநில கடற்பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று அக்னி 3 ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா, பல்வேறு வகையான அக்னி ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது நடத்திவருகிறது. ஆனால், முதல் முறையாக நேற்று இரவு நேரத்தில் அக்னி 3 ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.

அக்னி 3
அக்னி 3

அக்னி 3 ஏவுகணை 3,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன்கொண்டது. சுமார் 17 மீ அகலமும், 50 டன் எடையும் கொண்ட இதை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆதரவுடன் இந்திய ராணுவத்தால் சோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan

ஏவுகணையின் பாதை கணிக்கப்பட்டு சோதனை முடிவுக்காகக் காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ``அக்னி 3 ஏவுகணை இதோடு நான்காவது முறையாகச் சோதனை செய்யப்படுகிறது. முன்னர் நடந்த மூன்று சோதனைகளும் செயல் திறனைக் கண்டறிவதற்காகப் பகலில் நடத்தப்பட்டது, ஆனால், நேற்று முதல்முறையாக இரவு நேரத்தில் அக்னி 3 ஏவுகணை சோதனையிடப்பட்டுள்ளது” எனப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்னி 3
அக்னி 3
Twitter

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை 2011-ம் ஆண்டே இந்திய ஆயுதப்படைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று சோதனையிடப்பட்ட அக்னி 3 ஏவுகணையின் போர்டு கம்ப்யூட்டரில் மேம்படுத்தப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஏவுகணையில் ஏற்படும் இடையூறுகளைச் சரிசெய்யவும் வழிகாட்டவும் உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.