Published:Updated:

மும்பை குண்டுவெடிப்பு: தூக்கிலிடப்பட்ட குற்றவாளியின் கல்லறை மின்விளக்குகளால் அலங்கரிப்பு!

குற்றவாளியின் கல்லறை மின்விளக்குகளால் அலங்கரிப்பு!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளியின் கல்லறை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது குறித்து பாஜக கேள்வி எழுப்பியதோடு, இதற்கு முந்தைய சிவசேனா கூட்டணி அரசுதான் காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு: தூக்கிலிடப்பட்ட குற்றவாளியின் கல்லறை மின்விளக்குகளால் அலங்கரிப்பு!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளியின் கல்லறை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது குறித்து பாஜக கேள்வி எழுப்பியதோடு, இதற்கு முந்தைய சிவசேனா கூட்டணி அரசுதான் காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

Published:Updated:
குற்றவாளியின் கல்லறை மின்விளக்குகளால் அலங்கரிப்பு!

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டால் தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்ட யாகூப் மேமன் கடந்த 2015-ம் ஆண்டு நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவன் உடல் மும்பைக்குக் கொண்டுவரப்பட்டு கபரிஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், யாகூப் மேமன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டு, கல்லறை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க எம்.எல்.ஏ.ராம் கதம் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``யாகூப் மேமன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இப்போது சமாதியாக மாற்றப்பட்டிருக்கிறது. உத்தவ் தாக்கரே ஆட்சிக்காலத்தில் இந்த சமாதி அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் சார்பாக மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதி யாகூப் மேமன் உடல் புதைக்கப்பட்ட இடம் உத்தவ் தாக்கரே ஆட்சிக்காலத்தில் சமாதியாக மாற்றப்பட்டிருக்கிறது.

மின்விளக்கு அகற்றப்பட்ட சமாதி
மின்விளக்கு அகற்றப்பட்ட சமாதி

மும்பைமீதான அவர்களின் அன்பு இதுதானா... இதுவா தேச பக்தி... சரத் பவார், ராகுல் காந்தியுடன் உத்தவ் தாக்கரேவும் மும்பை மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார். ராம் கதமின் ட்விட்டர் பதிவைத் தொடர்ந்து மும்பை போலீஸார் தீவிரவாதி யாகூப் மேமன் கல்லறையில் அலங்கரிக்கப்பட்ட மலர்கள் மற்றும் மின்விளக்குகளை அகற்றும்படி கேட்டுக்கொண்டனர். ஷப்-இ-பரத் என்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து கல்லறை எல்.இ.டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஹாலோஜன் விளக்குகள் மார்ச் மாதத்துக்கு முன்பே போடப்பட்டன. அவற்றை அப்புறப்படுத்தும்படி உத்தரவிடப்பட்டிருப்பதாக போலீஸார் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

போலீஸ்
போலீஸ்

``கல்லறை அருகே மரம் ஒன்று ஒடிந்து விழுந்ததால் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க கல்லறையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. அவை இல்லாவிட்டால் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளே இருக்கும் எலும்புகள் வெளியில் வந்துவிடும். மார்பிள் பதிக்க முறைப்படி அனுமதி பெற்றிருக்கிறார்கள்" என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். தீவிரவாதியின் கல்லறை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.