Published:Updated:

`மூடப்பட்ட ஹோட்டல்; நண்பருக்கு வலை வீச்சு’ - கனிகா கபூரால் அவதிப்படும் லக்னோ நிர்வாகம்

பாடகி கனிகா கபூர் கலந்துகொண்ட பார்ட்டியில் பங்கேற்ற 260 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாலிவுட் பாடகி கனிகா கபூர் இந்த மாத தொடக்கத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு நடந்த சோதனையில் வைரஸ் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இருந்தும் அவர் 14 நாள்கள் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனச் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்துள்ளனர். ஆனால், அதிகாரிகளின் பேச்சைக் கேட்காத கனிகா, இங்கு வந்தவுடன் லக்னோ மற்றும் பிற இடங்களில் நடந்த பல்வேறு பார்ட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.

கனிகா
கனிகா

அதே பார்ட்டியில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் போன்ற பலர் கலந்துகொண்டுள்ளனர். தற்போது கனிகாவுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கலந்துகொண்ட பார்ட்டியில் பங்கேற்ற பிறருக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் அனைத்துப் பிரபலங்களும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்களில் 11 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

‘முதலில் நோயாளியாக இருங்கள்... பிறகு நட்சத்திரமாகலாம்!’ -கனிகா கபூரை சாடும் மருத்துவர்

அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி லக்னோ போலீஸார் கனிகா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதே விவகாரத்தில் கனிகாவுடன் நேரடி தொடர்பிலிருந்த 260 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் வீட்டிலும் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த 260 பேரில் கனிகாவின் நண்பரான ஓஜாஸ் தேசாய் மட்டும் கனிகாவுக்கு வைரஸ் உறுதியானதும் தலைமறைவாகிவிட்டதாக லக்னோ போலீஸார் தெரிவித்துள்ளனர்.

corona
corona

லக்னோவில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற பார்ட்டியில்தான் கனிகா இறுதியாகக் கலந்துகொண்டுள்ளார். அதே பார்ட்டியில் மும்பையை சேர்ந்த தொழில்முனைவோரான ஓஜாஸும் கலந்துகொண்டதால் காவலர்கள் அவரை தேடி வருங்கின்றனர். ‘ஓஜாஸை தேடும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். ஆனால் மும்பையில் அவர் இருக்கும் சரியான இடம் தெரியவில்லை. பாடகி கனிகா தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவரிடமும் விசாரணை நடத்தமுடியாத நிலை உள்ளது’ என உ.பி முதல்வர் அலுவலக அதிகாரி நரேந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாஜ் ஹோட்டல் பார்ட்டியில் கனிகா கலந்து கொண்டதால் லக்னோ மாவட்ட நிர்வாகம் அந்த ஹோட்டலை மூடியுள்ளது. அந்த பார்ட்டியில் வேலை செய்த ஹோட்டல் ஊழியர்கள் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ‘ஊழியர்களின் உடல்நிலை குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது வரை அனைவரும் சீரான உடல்நிலையுடனேயே உள்ளனர்’ என்று ஹோட்டல் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

லக்னோ மருத்துவமனை
லக்னோ மருத்துவமனை

கனிகாவின் உடல்நிலை பற்றித் தெரிவித்துள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனை இயக்குநர் திமான், “ கனிகா எங்களின் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பு தருகிறார். அவருக்கு இரண்டாவது முறை ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் பாசிடிவ் என்றே முடிவு வந்துள்ளது. அவர் முற்றிலும் குணமடையும் வரை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் எங்கள் கண்காணிப்பில் இருப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு