Published:Updated:

நிறத்தை வைத்து திட்டிய கணவன்; கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவி - அதிர்ச்சி சம்பவம்!

கொலை ( மாதிரிப் படம் )

கணவர் தன் நிறத்தை வைத்து திட்டியதால் மனைவி தன் கணவனைக் கோடாரியால் வெட்டி கொலைசெய்திருக்கிறார்.

நிறத்தை வைத்து திட்டிய கணவன்; கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவி - அதிர்ச்சி சம்பவம்!

கணவர் தன் நிறத்தை வைத்து திட்டியதால் மனைவி தன் கணவனைக் கோடாரியால் வெட்டி கொலைசெய்திருக்கிறார்.

Published:Updated:
கொலை ( மாதிரிப் படம் )

நிறம் குறித்த விமர்சனங்கள், கிண்டல், கேலிகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. அது தவறு என எத்தனை சட்டம் போட்டாலும், அது தொடர்கதையாகிவருகிறது. இந்த நிலையில், தனது நிறம் குறித்துப் பேசிய கணவருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் மனைவி ஒருவர். சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள துர்க் மாவட்டத்தில் இருக்கும் அம்லேஷ்வர் என்ற கிராமத்தில் வசித்தவர் ஆனந்த் சோனாவானே (40). இவரின் மனைவி சங்கீதா. சங்கீதா சற்று கறுப்பாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி ஆனந்த் தன் மனைவியை மோசமான வார்த்தைகளால் திட்டுவதோடு, அடிக்கடி மனைவியின் நிறத்தைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தார்.

நிறத்தை வைத்து திட்டிய கணவன்; கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவி - அதிர்ச்சி சம்பவம்!

இது தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. வழக்கம்போல் இதே பிரச்னையில் இருவருக்கும் இடையே இரவில் மீண்டும் சண்டை வந்தது. இருவரும் கடுமையான வார்த்தைகளால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கடும் கோபமடைந்த சங்கீதா, வீட்டில் கிடந்த கோடாரியை எடுத்து வந்து தனது கணவரை வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவனை அதோடு விடாமல், அவரின் மர்ம உறுப்பையும் வெட்டித் துண்டாக்கினார். காலையில் தன் கணவரை யாரோ கொலைசெய்துவிட்டதாக சங்கீதா சொல்லியிருக்கிறார். இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து சங்கீதாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது தன் கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீஸார் சங்கீதாவைக் கைதுசெய்து மேற்கொண்டு விசாரித்துவருகின்றனர். ஆனந்த்தின் முதல் மனைவி இறந்துபோனார். இதனால் இரண்டாவதாக சங்கீதாவை ஆனந்த் திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.