Published:Updated:

மூணாறு நிலச்சரிவு: `250 பேர் கொண்ட குழு; 6-வது நாள்!’ - மீட்புப் பணிகளில் தாமதம் ஏன்?

உடல்களை தேடும் மீட்புக் குழுவினர்.
உடல்களை தேடும் மீட்புக் குழுவினர்.

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உடல்களைத் தேடும் பணி 6-வது நாளாக இன்றும் நடந்துவருகிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இருக்கும் பெட்டிமுடி எனும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு, கடந்த 6-ம் தேதி இரவு 11.30 மணிக்கு நிலச்சரிவில் சிக்கியது. குடியிருப்பு அருகே ஓடும் சிறு ஓடையானது, பெருமழை காரணமாக, காட்டாற்று வெள்ளமாகப் பெருக்கெடுத்து, மணல்களை அள்ளிக்கொண்டு, குடியிருப்பின் மீது கொட்டியது. பெரிய பெரிய பாறைகளால், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இச்சம்பவத்தில், 25 வீடுகளில் வசித்த 82 பேர் சிக்கினர். இதில், 12 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், ஒருவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் பலியானார்.

மூணாறு நிலச்சரிவு: `5-வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!' - உடல்களைத் தேடும் பணி தீவிரம்
பெட்டிமுடி
பெட்டிமுடி

மண்ணில் புதைந்த 70 பேரை தேடும் பணி, கடந்த 7-ம் தேதி மதியம் முதல் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கேரள மாநில தீயணைப்புத்துறை, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புக்குழு எனச் சுமார் 250 பேர் கொண்ட மீட்புக்குழு, மழை, காற்று என எதையும் பொருட்படுத்தாமல், மண்ணில் புதையுண்ட உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, 10 சிறுமிகள், 15 சிறுவர்கள் உட்பட 52 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 18 நபர்களின் உடல்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உடல்களைத் தேடும் மீட்புக் குழுவினர்.
உடல்களைத் தேடும் மீட்புக் குழுவினர்.
மூணாறு நிலச்சரிவு: `மீட்புப் பணிகள் ஒருவாரம் நீடிக்கலாம்!' - மத்திய அமைச்சர் முரளிதரன்

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ``தொடர்ந்து மழை பெய்துவருவது மீட்புப் பணியில் தொய்வை ஏற்படுத்துகிறது. இருந்த போதும், இதுமாதிரியான சூழலில், மீட்புப் பணி செய்யவே நாங்கள் பயிற்சி பெற்றிருக்கிறோம். அதனால், மீட்புப் பணியை எப்போதும் நிறுத்தப்போவதில்லை. தினமும், அதிக உடல்களை மீட்டுக்கொண்டிருக்கும்போது, நேற்று மட்டும் 3 உடல்களைத் தான் மீட்க முடிந்தது. மீதம் உள்ள 18 பேரின் உடல்களைத் தேடுகிறோம். 15 முதல் 20 அடி ஆழத்தில் இருந்துதான் தற்போது உடல்களைத் தோண்டி எடுத்துவருகிறோம். மேலும், ஆழத்தில் உடல்கள் சிக்கியுள்ளனவா என ஆய்வு செய்யப்படுகிறது.

உடல்களைத் தேடும் மீட்புக் குழுவினர்.
உடல்களைத் தேடும் மீட்புக் குழுவினர்.
மூணாறு நிலச்சரிவு: மோப்ப நாய்; ஒரே இடத்தில் 8 உடல்கள்... 42 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

சம்பவ இடத்துக்கு அருகே ஓடும் ஓடையில் 3 உடல்களை மீட்டோம். அதனால், ஓடையில், உடல்கள் அடித்துச் செல்லப்பட்டனவா என்றும் சோதனை செய்துவருகிறோம். ஓடையில் உடல்களைத் தேடுவதற்காக, தனி குழு களமிறக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைவரது உடல்களையும் மீட்டுவிடுவோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு