Published:Updated:

`அவர்களுக்கு வசதியானதை பலவந்தமாகச் செய்கிறார்கள்!’ - மத்திய அரசை விமர்சித்த மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி
News
மம்தா பானர்ஜி

கொரோனா விவகாரத்தில் மாநில அரசைக் கேட்காமல் ரயிலை இயக்குவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே நடக்கும் அரசியல் மோதல் அனைவரும் அறிந்ததே. தற்போது கொரோனா, ஆம்பன் புயல் என மேற்குவங்க மாநிலமே சிதைந்துக் கிடைக்கும் நேரத்திலும் மம்தாவும் அமித்ஷாவும் வார்த்தைப் போர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மேற்குவங்க மாநில அரசின் கொரோனா நடவடிக்கைகளில் இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அமித்ஷா, மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் முன்னரே கடிதம் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டதால் கடுப்பான மம்தா, அமித்ஷாவையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மம்தா, ``நீங்கள் தொடர்ந்து மத்தியக் குழுக்களை மேற்குவங்கத்துக்கு அனுப்பி வருகிறீர்கள். எங்களால் அந்த வேலையைச் செய்ய முடியாது என நினைத்தால் மேற்குவங்கத்தின் கொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக் கூடாது? எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என நான் அமித்ஷாவிடம் கூறினேன். நான் பொதுவாக இதையெல்லாம் வெளிப்படுத்த மாட்டேன். ஆனால், தற்போதுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு இதை அமித்ஷாவுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீங்கள்தான் ஊரடங்கை அமல்படுத்தினீர்கள். ஆனால், ரயில்களும் விமானங்களும் இயங்குகின்றன. மக்களின் நிலை என்ன ஆவது? நான் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சருக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன், தயவு செய்து கொரோனா பரவுவதைப் பாருங்கள். எங்களிடம் ஏற்கெனவே ஒரு லட்சம் பாதிப்புகள் உள்ளன. அரசியலுக்காக மேலும் சில இடங்களில் பரவ வேண்டும் என நினைக்கிறீர்கள். பீகார் மொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவி வருகிறது. எங்களால் என்ன செய்ய முடியும். இந்தப் பேரழிவு நேரத்தில் மோடி தலையிட வேண்டும் என விரும்புகிறேன்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தை அவர்கள் அரசியல்ரீதியாகத் தொந்தரவு செய்கிறார்கள். கொரோனா, புயல் ஆகியவற்றை எதிர்த்து நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். இதற்கு இடையில் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மும்பை, பீகாரில் இருக்கும் தொழிலாளர்களை ரயில் மூலம் மேற்குவங்கத்துக்கு அனுப்புகிறார்கள்.

ரயில் இயக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசோ ரயில்வே நிர்வாகமோ யாரும் எங்களிடம் அனுமதி அல்லது கருத்துக் கேட்கவில்லை. இதனால் ரயில்வே நிர்வாகத்துக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால், அப்படி அனுப்புவதற்கு முன்னால் எங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். இந்த விவகாரம் மேற்குவங்கத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லையா? அரசியல் நோக்குடன் அவர்களுக்கு வசதியானதைப் பலவந்தமாகச் செய்கிறார்கள்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா.