Published:Updated:

`சொன்னால் கேட்காதவர்களுக்கு தோட்டாக்களின் மொழி புரியும்!’ - யோகி ஆதித்யநாத் மீண்டும் சர்ச்சை

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத் ( ANI )

`சிவ பக்தர்களைத் துன்புறுத்த நினைப்பவர்களுக்கு நான் சொல்வது புரியவில்லையென்றால் புல்லட்டின் மொழி புரியும்’ என யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் வரும் 8-ம் தேதி வாக்குப் பதிவும் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அங்கு பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்து வருகிறார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
ANI

நேற்று டெல்லி ரோஹினி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் தற்போது ஆட்சியில் உள்ள டெல்லி அரசை விமர்சித்தும் கன்வர் யாத்திரைக்கு அச்சுறுத்தல் விளைப்பவர்களை எச்சரித்தும் பேசியுள்ளார். ``ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி மக்களின் வாக்குகள்தான் புல்லட் அல்ல. உங்கள் வாக்குகளைச் செலுத்தும்படி முறையிடத்தான் நான் வந்துள்ளேன். அரவிந்த் கெஜ்ரிவாலால் டெல்லி மக்களுக்குச் சுத்தமான குடிநீரைக் கூட வழங்கமுடியவில்லை, ஆனால், அவருக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அவருக்கு ஷாஹின் பாத் மட்டுமே தேவை.

`மோடியை அவதூறாகப் பேசுவதைப் பொறுக்க முடியாது!’ - பாகிஸ்தான் அமைச்சருக்குப் பதிலடிகொடுத்த கெஜ்ரிவால்

உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். கெஜ்ரிவால் வளர்ச்சிக்காகப் பணம் வழங்கமாட்டார். ஆனால், ஷாஹின் பாத் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வாங்க மட்டும் பணம் கொடுக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தொடர்ந்து கன்வர் யாத்ரா பற்றிப் பேசிய அவர், ``நாங்கள் யாருடைய பண்டிகை, விழாக்களையும் சீர்குலைக்கவில்லை. அவரவர் நடைமுறைப்படி அனைவரும் பண்டிகை கொண்டாடுகிறார்கள். ஆனால், சிவ பக்தர்கள் கலந்துகொள்ளும் கன்வர் யாத்திரையில் அசம்பாவிதம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

சிவ பக்தர்களுக்கு ஏதேனும் நடந்தால் நாங்கள் அமைதிகாக்க மாட்டோம். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் சொல்லும் விளக்கம் புரியவில்லை எனில் நிச்சயம் அவர்களுக்குத் தோட்டாக்களின் மொழி புரியும். உத்தரப் பிரதேசத்தில் நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக, கன்வர் பக்தர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், நான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. பக்தர்களுக்கு வானிலிருந்து மலர் தூவும் ஏற்பாடும் நான் செய்துள்ளேன்” எனப் பேசியுள்ளார். யோகி ஆதித்யநாத்தின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களைச் சேர்ந்த சிவ பக்தர்கள் கன்வர் யாத்திரை என்ற பெயரில் பாபா தாமில் உள்ள பைத்யாநாத் ஜோதிர்லிங்க கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த யாத்திரையில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு